மானாவாரி நேரடி விதைப்பு 15 கிலோ மீட்டர் பாசனப் பயிர் நேரடி விதைப்பு 10 கிலோ விதை தேவைப்படும்.
விதை நேர்த்தி
விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைத்தல்
மானாவாரி முறையில் விதையை தூவ வேண்டும். பிறகு பாசன முறையாக இருந்தால் 10 அல்லது 20 சதுர மீட்டர் பாத்திகள் அமைக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,7, 12, 17ஆம் நாள் நீர் பாய்ச்சவேண்டும். களிமண் பாங்கான பூமிக்கு விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,9 ,16ஆம் நாள் நீர் பாய்ச்சினால் போதும் .பிறகு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.