கோடைகாலப் பால் உற்பத்தி பாதிப்பு- தடுக்க என்ன செய்ய வேண்டும்!

கால்நடைகளில் கோடை காலப் பராமரிப்பு என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. அவ்வாறு பராமரித்தால், பால் உற்பத்தி பாதிப்பில் இருந்து விவசாயிகள் எளிதில் தப்பலாம் என்றார்.

கோடையில் இருந்து தப்ப (Escape from the summer)
கோடை காலத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெப்பத்தினால், கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாகப் பசுந்தீவனப் பற்றாக்குறை, கடுமையான வெப்பம் போன்றவற்றால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றார்.

ஈக்களின் பெருக்கமும் அதிகமாகி கால்நடைகளின் மேல் உட்கார்ந்துத் தொல்லை கொடுப்பதால், பசுக்களும் அமைதியிழந்துக் காணப்படும். இதன் காரணமாகவும் பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடிய சூழல் உருவாகும்.

கட்டுப்படுத்தும் வழிகள் (Ways of controlling)
எனவே, இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஈக்களைக் கட்டுப்படுத்தும் மருந்து தெளிக்கலாம்.

தினமும் தொழுவத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

பசுந்தீவனங்களைத் தவறாமல் கொடுப்பது அவசியம்.

காய்ந்த புல் மற்றும் குழிப்புல்லுடன் அடர் தீவனங்களையும் கறவை மாடுகளின் உணவில் சேர்க்க வேண்டும்.

 

குறிப்பாக 4 அல்லது 5 முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.

வெயில் அதிகமாக இருக்கும் போது மேய்ச்சலுக்கு அனுப்பு கூடாது என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories