இலைவழி ஊட்டச்சத்துக்களின் நன்மைகள்

மண்ணில் இடப்படும் உரங்களை விட குறைந்த அளவு உரங்கள் இருந்தாலே போதுமானதாகும்.

பயிர்களுக்கு சரியான விதத்தில் ஊட்டச்சத்து கிடைத்திட வழிவகை செய்கிறது .அவை கள் உடனடியாக ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வதுடன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்படுகிறது.

பயிர்கள் வளர்ச்சியைத் தாங்கி வளரும் தன்மையை பெறுகிறது.

திரட்சியான கதிர்கள், விதைகள் ,காய்கள் மற்றும் பழங்கள் பெற உதவுகிறது.

பயறுவகை பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் சிறப்புநிலை நுண்ணூட்டக் கலவையை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நுண்ணூட்டம் ஆனது 1எக்டருக்கு 5 கிலோ வீதம் பரிந்துரைக்கப்படுகிறது. இதனை பூப்பதற்கு முன்பு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பயிர்கள் வரட்சியைத் தாங்கி வளரும் திறமை பெறுவதுடன் பூக்கள் உதிர்வது தவிர்க்கப்படுகிறது.

மேலும் பூக்கின்ற பூக்கள் அனைத்தும் காயாக மாறிட உதவுவதால் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories