கன்று வீச்சு நோயை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

 

\\\\
இயற்கை உரம் எப்படி கிடைக்கிறது?

இயற்கை உரம் என்பது விலை கொடுத்து எவ்வித உரத்தையும் வாங்காமல் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை (தவிர கால்நடை கழிவுகள்) கொண்டு நன்கு மக்க வைத்து உரமாக்கி பயன்படுத்துவதாகும்.

அருகில் உள்ள தோட்டத்தில் ரசாயன மருந்துகளை தெளித்தால் அது நம் தோட்டத்துக்கு பரவாமல் இருக்க என்ன செய்யலாம்?

உயிர்வேலி பயிர்களை பயிர் செய்யலாம்.

சவுண்டல் ,அகத்தி ,முள்முருங்கை, ஆமணக்கு ,ஆடாதோடா ,வேலிப்பருத்தி ,நெய்வேலி, காட்டாமணக்கு போன்றவற்றையே உயிர் வேலியாக பயிரிடலாம். இதன்மூலம் ரசாயன மருந்து களிலிருந்து தோட்டத்தை பாதுகாக்கலாம்.

கரும்பு வயலில் குருத்து பூச்சி தாக்குதலை எப்படி உயிரி முறையில் கட்டுப்படுத்தலாம்?

கார்த்திகா என்னும் பூச்சிகள் மூலம் டிரைக்கோகிரம்மா ஜப்பானிய முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

3 சிசி அட்டைகளை கருப்பு சோகைக்கு இடையில் கட்டிவிட்டால் அந்த முட்டைகள் ஒட்டுண்ணி பூச்சிகளை உருவாக்கி புழுக்களைத் தின்று எஞ்சிய புழுக்களின் உடலில் தன்னுடைய முட்டைகளை விட்டு விட்டு சென்றுவிடும் இதனால் குருத்துப் புழுக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

கத்தரி செடி வேகமாக வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?

மீன் அமிலத்தை நீர்ப்பாசனம் வழியாக கொடுக்கலாம். தொடர்ந்து 7 நாட்களுக்கு ஒரு முறை மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை நீர் பாசனம் மூலம் கொடுப்பதால் நல்ல வளர்ச்சி காணப்படும்.

கன்று வீச்சு நோயை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கன்று வீச்சு நோய் வராமலிருக்க கறவை மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

இரத்த பரிசோதனை செய்து நோய் உள்ள போலி காளைகளையும் கறவை மாடுகளை பண்ணையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாடுகளில் நோய் கிருமி தங்கி அவ்வப்போது வெளியேறி நோயைப் பரப்புவதால் இத்தகைய மாடுகளைப் பண்ணையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories