“கரையான் பட்ட பயிர் ஒரு முழம் கட்டை”

விவசாயத்தைப் பொறுத்தவரை பயிர்களுக்கு பல சேதம் ஏற்படுகின்றது. மண்ணின் அடியில் இருந்து சேதம் ஏற்படுகிறது.அந்த வகையில் இன்றைய வேளாண்மை பழமொழியை பார்க்கலாம்.

ஆனந்த் ஒருநாள் தன்னுடைய தந்தையின் ஆலோசனைப்படி மரக்கன்றுகள் நடவு செய்யலாம் என்று ,அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் மரக்கன்றுகளை வாங்க சென்று இருந்தான்.

அவர் மரக்கன்றுகளை வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில்…

மலை கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர் ராகவனை பார்த்தார். அவரை பார்த்து ஆனந்த நீ என்ன விவசாயம் செய்து உள்ளாய் என்றார். உடனே அவர் மாமரம் தான் நடவு செய்துள்ளேன் என்றார். அப்படின்னா எனக்கு மாமரம் நடைமுறைகளைப் பற்றி கொஞ்சம் சொல்கிறாயா என்று கேட்டார்.

அதுகேட்ட ராகவன் உதாரணமாய் சொல்கிறேன் கேள் என்றார் மாங்கன்றுகளை நடவு செய்யும் முன்பு நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழ வேண்டும் பிறகு ஒரு மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் ஒரு மீட்டர் ஆழம் உள்ள குழிகளில் செடிகள் நடுவதற்கு 15 நாட்களுக்குள் முன்னராகவே வெட்ட வேண்டும்.

அந்த குழியில் மரக்கன்று நடவு செய்வதற்கு முன்பு காய்ந்த இலைகள் மற்றும் தழைகளை போட்டு எடுக்க வேண்டும் என்றார்…

இதை ஏன் செய்யவேண்டும் என்று கேட்டான் ஆனந்த்.. அதற்கு ராகவன் “கரையான் பட்ட பயிர் ஒரு முழம் கட்டை”
என்பது உனக்குத் தெரியாதா என்றார். அதைக்கேட்ட ஆனந்த நீ கூறியது எனக்கு சரியாக புரியவில்லை என்றார்.

அதற்கு ராகவன் நடும் நாற்றில் கரையான் தாக்குதல் இருந்தால் அந்தப் பெயர் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பிறகு அப்படியே நின்று கருகிவிடும். அதனால் செலவு மற்றும் முதலீடுகளில் இழப்பு ஏற்படும். இதையடுத்து அவ்வாறு காய்ந்த இலைகள் மற்றும் தழைகளை குழிகளில் போட்டு எரிக்க வேண்டும் இதனால் கிடைக்கும் சாம்பலை கன்றுகளின் வேர்ப்பகுதியில் இட்டால் கரையான் தாக்குதலை தடுக்கலாம்.

சாம்பல் தூவி விடலாம் .மேலும் அதனுடன் வேப்பம் புண்ணாக்கும் கலந்து இடலாம். இதனால் கரையான் தொல்லைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றான் ராகவன்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories