மரங்கள் வளர்ச்சியைத் தாங்கி வளர எளிய முறைகள்

மரக்கன்று குறைந்தது 2 அடி உயரம் மற்றும் நல்ல கிளைவேர் இருக்கவேண்டும். ஓரளவு வெயில் படும் இடத்தில் இருக்க வேண்டும் .குறைந்தது ஒன்றரை அடி ஆழம் இருக்க வேண்டும் .அதில் முதலில் ஒரு கைப்பிடி அளவில் சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும் .பிறகு ஒரு கிலோ மண்புழு உரம் ,அரை கிலோ வேப்பம் புண்ணாக்கு இவற்றுடன் மண் கலந்து அரை அடி உயரம் நிரப்ப வேண்டும்.
செடி நடும் போது கிட்டத்தட்ட தரைமட்டத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் நடவு செய்வதால் ஈரப்பதம் வே ருக்கு கிடைப்பதுடன் வளர்ச்சி மற்றும் சிறிதளவு ஆழமாக பரவுவதால் வேகமான காற்றை கூட தாங்கும் சக்தி மற்றும் வேர்க் கரையான் தாக்காமல் தப்பிக்கும். வறட்சியை நன்றாகத் தாங்கி வளரும்.

உயிர் உரங்கள் தொழு உரத்துடன் கலந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வேரில் இடுவதால் வறட்சி தாங்கும் அரை லிட்டர் கோமியம் கால் லிட்டர் மோர் ஆகியவற்றை கலந்து ஒரு வாரம் புளிக்க வைத்து சம பங்கு தண்ணீர் கலந்து வேரில் ஊற்றினால் கோடைகாலத்தில் வறட்சி தாங்கி வளரும் .வேகமாக வளர்ச்சி இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories