மானிய விலைவில் திசு வாழை நாற்றுகள் விற்பனை- விவசாயிகளுக்காக!

கோவையில் மானிய விலையில் திசு வாழை நாற்றுகள் (Tissue Banana Seeding) வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள் இவற்றை வாங்கிப் பயனடையுமாறு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

24 ஏக்கர் இலக்கு
சூலுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திசு வாழை எனப்படும் ஜி 9 சாகுபடிக்கு, 24 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 14.82 ஏக்கர் பொதுப் பிரிவினருக்கும், 9.88 ஏக்கர் ஆதி திராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்காக கண்ணம்பாளையம் பண்ணையில், 10 ஆயிரம் திசு வாழை நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன.

ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, 2.47 ஏக்கருக்கு, மானிய விலையில், 2,500 திசு வாழை நாற்றுகள் வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
சிட்டா

அடங்கல்

ஆதார் நகல்

போட்டோ 2

ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு, உதவி இயக்குனர் -97516 99850, அலுவலர்கள் 99442 64889, 97865 55569, 80151 63864 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories