காய்கள் கனிந்துள்ளனவா எனக் கண்டறிய லேசர் தொழில்நுட்ப வசதி!

பொதுவாக காய்களை கனியாக (Fruits) மாற, சில நாட்கள் கிடங்கில் வைத்து சேமிப்பதுண்டு. அவ்வாறு சேமித்து வைத்துள்ள நாட்களில், நாம் அடிக்கடி காய்கள் கனிந்துள்ளனவா என்று சரிபார்ப்பதுண்டு. காய்கள், கனிந்துள்ளனவா? என்பதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த, 21ம் நுாற்றாண்டில் கூட, ஒவ்வொரு சுளையையும், ஒவ்வொரு குலையையும், பழுத்திருக்கின்றனவா என்று சோதிக்க, நம்பகமான தொழில்நுட்பங்கள் (Technology), இன்னும் பரவலாகவில்லை. அண்மையில் தான், ஜப்பானைச் (Japan) சேர்ந்த ஆய்வாளர்கள், இதற்கு தீர்வினை கண்டறிந்துள்ளனர் என்றார்.

லேசர் தொழில்நுட்பம்
மாங்காய், வாழை போன்ற கனிகளை, கையால் தொடாமல், லேசர் (Laser) மற்றும் பிளாஸ்மா அதிர்வலைகள் (Plasma vibration) மூலம், துல்லியமாக பழுத்திருப்பதை கண்டறிய முடியும் என, அவர்கள் நிரூபித்துள்ளனர்.
மாம்பழத்தின் மீது, அதிதிறன் லேசர் கதிரை பாய்ச்சினால், தோலுக்கு அடியில் பிளாஸ்மா குமிழ்கள் உருவாகும். அக்குமிழ்களின் மீது, ‘லேசர் டோப்ளர் வைப்ரோமீட்டர் (Laser Doppler vibrometer) கருவியின் அதிர்வலைகள் பட்டுத் திரும்பும்போது, பழத்தின் காய் மற்றும் கனிந்த தன்மையை தெரிந்துகொள்ள முடியும் என்றார்.

தொடரும் ஆய்வுகள்
ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு, இது ஆரம்ப கட்ட வெற்றி தான். மாங்கனி, உள்ளே கெட்டிருந்தாலோ, வண்டு துளைத்திருந்தாலோ, லேசர் கதிர்களின் கணிப்பு தவறாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, இக்கருவியின் துல்லியத்தை மேலும் கூட்ட, ஆய்வுகள் தொடர்கின்றன. ஆய்வுகளின் முடிவுகள் வெற்றியடையும் பட்சத்தில், இந்தத் தொழில்நுட்பம் அனைத்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories