விவசாயத்தில் பண்டைய காலம் தொடங்கி இன்றைய காலம் வரை உழவுக்கு பயன்படும் கருவிகளில் ஒன்றுதான் கலப்பை அதைப் பற்றி வேளாண் பழமொழி விளக்கத்தை இங்கு காணலாம்.
கேசவன் பாரம்பரிய விவசாயி .அ வரது வீட்டில் அவரது தாத்தா காலத்தில் பயன்படுத்திய பல வகையான கருவிகளை பாதுகாப்பாக வைத்திருந்தார். அதை பார்த்து அவரது மகள் அபிராமி ஏனப்பா இதை பயன்படுத்துவதே கிடையாது ஆனால் ஆயுத பூஜை அன்று மட்டும் எடுத்து பூஜை செய்து பின்னர் அப்படியே வைத்து விட்டு விடுகிறீர்கள் என்றால்.
உடனே அவரது தந்தை நமது முன்னோர்களின் மரபை நாம் விட்டுவிட முடியாது அவர்களின் ஞாபகமாக இதை வைத்துள்ளேன் என்றார்.
அதற்கு அவரது மகள் அபிராமி அப்பா அந்த காலத்தில் உள்ள இந்த கருவி எதற்கு பயன்படும் என்று கேட்டாள் அதற்கு அவரது தந்தை அதைத்தான் கலப்பை என்று சொல்வார்கள் என்றார்.
இதை நாம் இப்பொழுது பயன்படுத்தலாமா என்றால் அபிராமி .
அதற்கு அவரது தந்தையை நாம் பயன்படுத்துவது கடினம். ஏனென்றால் இந்த கலப்பை தேய்ந்து குட்டை ஆகி விட்டது ..அதனால் பயன்படுத்த முடியாது என்று கூறி,”கூளை குடியை கெடுக்கும் குட்டை கலப்பை காட்டை கொடுக்கும்” இன்று பழமொழியை கூறினார்.
அதைக் கேட்ட அவரது மகள் அபிராமி ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்றால்.
எதற்கு அவளது தந்தையின் வேளாண்மைக்கு பயன்படுத்தும் கருவிகள் சரியாக இருக்குமானால் விவசாயிகளுக்கு மிகுந்த பலன் தரும்.இல்லை என்றால் நிலம் வீணாகிவிடும் என்ற நடைமுறை உண்மையை இந்த பழமொழி விளக்குகிறது.