சோலார் விளக்குப் பொறி சிறப்பு அம்சங்கள்

சோலார் விளக்குப் பொறி ஆனது புற ஊதா ஒளி தொழில்நுட்பம் மூலம் தாய் அந்துப் பூச்சிகளைக் கவரக்கூடியது.

இது மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் தானியங்கி முறையில் செயல்படுகிறது. இந்த விளக்குப்பொறி பூச்சிகளின் தாக்கம் அதிகமுள்ள நேரங்களில் பயன்பாட்டில் இருக்கும்.பிறகு தானாகவே நின்று விடும்.

இதற்கு மின்சாரம் தேவை இல்லை .இது முற்றிலும் சூரிய ஒளி மூலம் சோலார் பேனல் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த விளக்குப் பொறி தேவைப்படும் இடத்திற்கு மாற்ற முடியும்.

நன்மைகள்

இது பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. குறிப்பாக விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகள்மற்றும் துளைப்பான், பழம் துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சிகள் ,வெள்ளைப் பூச்சி வண்டுகள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பூச்சிகளை கவர தரக்கூடியது.

ஒரு தாய் அந்துப் பூச்சியை பிடிப்பதால் அதன் மூலம் உருவாக்க கூடிய 800க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை அடையாளம் காண முடியும்.
நன்மை செய்யும் பூச்சிகளின் மகரந்த சேர்க்கைக்கு பெருமளவில் உறுதுணை புரிந்து அதிக மகசூல் பெற உதவுகிறது. இது அனைத்து பயிர்களுக்கும் உபயோகபடுத்தலாம் .ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 2 சோலார் விளக்குகளை பயன்படுத்தலாம்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories