பூச்சி தாக்குதலை கண்டறிய இவ்வளவு கருவிகள் இருக்கா? படிச்சு பாருங்க தெரியும்..

பூச்சி தாக்குதல் கண்டறியும் கருவிகள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பூச்சிகளின் அலையும் தன்மையினை பயன்படுத்தி, சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் அவை இருப்பதை கண்டுபிடித்து கட்டுப்படுத்த பல்வேறு கருவிகளை வடிவமைத்துள்ளது.

அவையாவன

** தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சிகளை கண்டறியும் கருவி ** தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் குழி வடிவ பொறி

** தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இரண்டு செயல்பாடுகளையுடைய பொறி ** பூச்சிகளை கண்டறியும் கருவி

** தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தானியங்கி பூச்சி நீக்கும் அமைப்பு

** புறஊதா கதிர் மூலம் வேலை செய்யும் தானிய கிடங்குகளில் உபயோகப்படுத்தப்படும் பொறிகள்

** சேமித்து வைக்கப்பட்டுள்ள பயறுவகை தானியங்களிலுள்ள பூச்சிகளின் முட்டைகளை நீக்கும் கருவி

** சேமிப்பு கிடங்குகளில் சேமித்துவைக்கப்பட்டுள்ள பொருட்களில் பூச்சிகளை கண்காணிக்கும் கருவி

** இக்கருவிகள் பல இடங்களில் பரவலாக உபயோகப்படுத்தப்ப்படுவது மட்டுமன்றி மாநில மற்றும் தேசிய அங்கீகாரத்தினை பெற்றுள்ளன.

** பொது விநியோகத்திற்காக, உணவு தானியங்கள் நிறைய நாட்களுக்கு சேமித்துவைக்கப்படுகின்றன. உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களால் தானியங்களின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்படும் சேதாரத்தில் பூச்சிகள் முக்கியபங்கு வகிக்கின்றன.

** சேமிப்பு கிடங்குகளில் பூச்சிகள் பறக்கும் போதும் தானியங்களின் மீது ஊறும் போதும் அவற்றின் தாக்குதல் தெரியவருகிறது. இச்சமயத்திற்குள், தானியங்களின் மீது அதிக தாக்குதலை பூச்சிகள் ஏற்படுத்தியிருக்கும்.

** எனவே, சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் அதிக இழப்பினைத் தடுக்க, பூச்சிகளின் தாக்குதலை சரியான சமயத்தில் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories