மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவிகள்- விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க மானியத்தில் சொட்டு நீர் பாசனக் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது என்றார்.

அரசின் நடவடிக்கை (Government action)
வீட்டுத்தோட்டத்தின் மூலம் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது மற்றும்

யாரை அணுகலாம்? (Who can be approached?)
இதன் ஒருபகுதியாக, கோவையில், சொட்டு நீர் பாசனத்தில், வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைக்க, ரூ.720 மதிப்பிலான உபகரணங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மானியத்தில் சொட்டு நீர் பாசனக் கருவி பெற விரும்புபவர்கள், தடாகம் சாலையிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார்.

விதைகள் (Seeds)
இதேபோல், வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க, ஆறு விதமான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியன, ரூ.510க்கு வினியோகிக்கப் படுகின்றன.

சொட்டு நீர் பாசன உபகரணங்கள் (Drip irrigation equipment)
இவற்றுடன், சுட்டெரிக்கும் வெயில் காலத்தில், காய்கறி பயிர்களுக்கு நீர் பாசனம் வழங்கிட, 10 சதுர மீட்டர் பரப்பளவுக்கான சொட்டு நீர் பாசன உபகரணங்கள், ரூ.720க்கு வழங்கப்படுகின்றன.

ரூ.400 மானியம் (Rs. 400 Subsidy)
ஆயிரத்து 120 ரூபாய் விலை உள்ள சொட்டு நீர் பாசன உபகரணங்கள், ரூ.720க்கு வழங்கப்படுகிறது. இதில், ரூ.400 மானியமாகும்.

ஆவணங்கள் (Documents)
இதற்கு, வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் ஆதார் அட்டையின் நகலுடன், கோவை தடாகம் சாலையிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories