இயற்கை விவசாயத்திற்கு மாறிய புது விவசாயி

இயற்கை விவசாயம் செய்து வரும், விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த, தனசுந்தர் கார்த்திக்:

 

எங்கள் தாத்தா, முழுநேர விவசாயி. பொறியாளர் வேலை பார்த்த அப்பா, தற்போது தான், பணி ஓய்வு பெற்றுள்ளார். அம்மா, ஆசிரியையாக உள்ளார் என்றார் .
பி.டெக்., முடித்த நான், வேலைக்காக சென்னை சென்றதால், எப்போதாவது, பயிர் வைப்போம்.
எனவே , அம்மாவுக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் அறிகுறி இருப்பதாக, மருத்துவர் கூறினார். ரசாயன உர காய்கறிகளால் தான், இவ்வாறான நோய் அதிகமாக வருவதாக, நண்பர்கள் கூறவே, இயற்கை விவசாயம் பற்றி, இணையதளத்தில் தேட ஆரம்பித்தேன்.அப்போது, இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் பற்றி தெரிந்து, அவரிடம் பயிற்சி எடுக்க நினைத்த போது, அவர், இயற்கையில் ஐக்கியமாகி விட்டார்.
இயற்கை விவசாயம், மதிப்பு கூட்டல், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி எடுத்து, நஞ்சில்லா விவசாயம் செய்ய முடிவு செய்து, ஊருக்கு வந்தேன்.எங்கள் நிலத்தை சுத்தப்படுத்தி, செம்மறி ஆட்டுக்கிடை அடைத்து, சின்ன வெங்காயம், நிலக்கடலை சாகுபடியை ஆரம்பித்தேன்.
மழைநீரை நிலத்தை விட்டு வெளியே போகாமல், உள்ளுக்குள்ளேயே சேமித்து வைக்க, கோடை உழவு முக்கியம்.
இதனால், இறுகலான மண் கட்டிகள் உடைந்து, கூட்டுப்புழுக்கள், முட்டைகள் மேலே வந்து, வெயிலில் காய்ந்து அழிந்துவிடும்; களைகளும் கட்டுப்படும்.
அதேபோல், ஆண்டுக்கு ஒருமுறை உளிக்கலப்பை மூலம், ஆழமாக உழவு ஓட்டுவேன். அதனால், மழை நீர் முழுவதும் சேகரமாகிவிடும்.அத்துடன், பல பயிர் சாகுபடி முறையையும் கடைப்பிடிக்கிறேன்.
இம்முறையால், அறுவடை வேலை சுலபமாக இருப்பதுடன், ஏதாவது ஒரு பொருளுக்கு விலை குறைந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
நாட்டு ரகப் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்தால், விதைக்காகவும் அலைய வேண்டியதில்லை.’விவசாயிகளே கண்டுபிடிப்பாளராக மாற வேண்டும் என, நம்மாழ்வார் கூறுவது போல், ‘சைக்கிள் உழவுக்கருவி’யின், உழவுக்கொக்கிகளில் சிறு மாற்றம் செய்து, பயன்படுத்தி வருகிறேன்.
மண் இளக்கி கருவியை பட்டறையில் கொடுத்து உருவாக்கி உள்ளேன்.மேலும், நிலக்கடலையை ஆட்டி, கடலை எண்ணெய் ஆகவும், எண்ணெய் மற்றும் சின்ன வெங்காயத்தை மார்க்கெட் எடுத்து செல்லாமல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்குமே விற்பனை செய்கிறேன்.
சூரியகாந்தி, நாட்டுக் கம்பு, வெள்ளைச்சோளம், ஊடுபயிராக நாட்டு உளுந்தும் போட்டுள்ளதால், ஒவ்வொன்றாக அறுவடைக்கு வரும்.இயற்கையில் விளைந்த பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளது.
நம்மாழ்வாரின் ஆசைப்படி, என்னை மாதிரி நிறைய இளைஞர்கள், இயற்கை விவசாயத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்றார்
தொடர்புக்கு: 9952318580 .

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories