பசுந்தீவனமான சோளத்தை எந்த முறைப்படி சாகுபடி செய்யணும்?…

** சோளம் தானிய உற்பத்திக்கும், தீவன உற்பத்திக்கும் பயிரிடப்படுகிறது

** சோளம் வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்

** வெப்ப மண்டலப் பகுதிகளில் 25-35o செல்சியஸ் வெப்பநிலையில் சோளம் நன்றாக வளரும்

** மலைப்பகுதிகளில் அதாவது 1200 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள இடங்கள் இப்பயிர் வளர்வதற்கு ஏற்றதல்ல

** வருட மழையளவு 300-350மிமீ இருக்கும் இடங்களில் சோளம் பயிரிடப்படுகிறது

** மணல் பாங்கான மண்ணைத் தவிர மற்ற எல்லா வித மண்ணிலும் சோளம் வளரும்

** நீர்ப்பாசனம் அளிக்கப்படும் இடங்களில் பயிரிட ஏற்ற சோள இரகங்கள் (ஜனவரி முதல் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் முதல் மே) கோ-11, கோ-27, கோ-எஃப் எஸ் 29

** மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் சோள ரகங்கள் (செப்டம்பர்-அக்டோபர்) கே 7, கோ-27, கோ எஃப் எஸ் 29, கே 10

** கோ எஃப் எஸ் – 29 எனும் சோள ரகத்தினை ஒரு முறை பயிரிட்ட பிறகு திரும்பத் திரும்ப அறுத்து மாடுகளுக்குப் தீவனமாக போடலாம்.

** ஒரு ஹெக்டேர் நிலத்தில் சோளம் பயிரிடத் தேவையான விதையளவு 40 கிலோக்களாகும். (கோ எஃப் எஸ் 29 ரகத்திற்கு மட்டும் 12.5 கிலோ)

** பசுந்தீவனமாக சோளத்தினை பூ விட்ட பிறகு உபயோகிக்கலாம்

** ஒரு முறை மற்றும் அறுவடை செய்யப்படும் சோளப் பயிரை அதன் 60-65ம் நாள் அறுவடை செய்யலாம். ஆனால் பல முறை அறுத்து உபயோகிக்கப்படும் சோளப்பயிரை விதை விதைத்து 60 நாளும், பிறகு 40 நாள் கழித்தும் அறுவடை செய்யலாம்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories