பாசன நீர் குறைந்த பகுதிகளுக்கு ஏற்ற மாற்றுப் பயிர் பப்பாளி!

விவசாயிகள் பாசன நீர் குறைந்த பகுதிகளில், சிறந்த மாற்றுப்பயிராக பப்பாளியைப் பயிரிட்டு பயனடையலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீர் சார்ந்த தொழில் (Water based industry)
விவசாயம் என்பதே நீர் சார்ந்த தொழிலாகும். இருப்பினும் இருக்கின்ற நீருக்கு ஏற்றப் பயிர் சாகுபடி செய்யும்போது, அதற்கேற்ற பலனை அடையலாம். குறிப்பாக குறைந்த நீரில் சாகுபடி செய்யக்கூடிய மாற்றுப்பயிர்களை அறிந்துகொண்டு அந்தப் பயிர்களைச் சாகுபடி செய்து கூடுதல் வருமானத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

பாசன நீர் பற்றாக்குறை (Lack of irrigation water)
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், சில நேரங்களில், பாசன நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

மாற்றுப்பயிர் (Alternative crop
இதற்குத் தீர்வாக, பாசனநீர் குறைவாக உள்ள புதியஆயக்கட்டு பகுதியில், மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பப்பாளி சாகுபடி (Papaya cultivation)
ஒரு ஏக்கர் பரப்பில், 600 பப்பாளிக் கன்றுகள் வரை சாகுபடி செய்ய முடியும். உழவு செய்து கன்றுகள் நடவு செய்வதில் தொடங்கி, வளர்ந்து மரமாகி காய்ப்பது வரை, சுமார் ரூ.60,000 வரை செலவாகிறது மற்றும்

25 மாதங்கள் மகசூல் (Yield 25 months
பத்து மாதத்திலிருந்து பப்பாளியைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 25 மாதங்கள் வரை மகசூல் கொடுக்கும் இதில்

அதிக நீர் தேவையில்லை (Does not require much water)
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பப்பாளி சாகுபடிக்குக் குறைந்த அளவு பாசன நீர் போதுமானதாகும். அதிக தொழிலாளர்களும் தேவைப்படுவதில்லை.

ஆண்டு முழுவதும் விற்பனை (Sales throughout the year)
பப்பாளிப் பழங்களுக்கு ஆண்டு முழுவதும் தேவையுள்ளதால், போதிய விலையும் கிடைக்கிறது. இங்கு பறிக்கப்படும் பப்பாளிப் பழங்கள், அருகிலுள்ள மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால், பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுப்பதாக உள்ளது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories