களைகளைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
மனிதன் விவசாயம் செய்வதற்கு முன்பே களைகள்; தோன்றியதாகும்.. களைகள் என்பது சாகுபடி செய்த பயிரை தவிற மற்ற எல்லாமே களைகள். அது பாரபரியமாக இருப்பதால் எல்லா சூழ்நிலையிலும் வாழும் தன்மை கொண்டது.
களையின் தன்மை பல இயற்கை சீற்றங்களை தாண்டிக்கூட முளைக்கும் தன்மை கொண்டது. எல்லாக் களைகளும் ஒரே சமயத்தில் முளைக்காது. எனவே களைகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பலமுறைகளை கையாண்டாத்தான் களைகளை கட்டுப்படுத்த முடியும்.
களைகளில் ஏற்படும் பிரச்சனைகள்
களை எடுக்காத பயிர் கால் பயிர் என்று பழமொழி கூறுவார்கள். அது களையினால் 20 லிருந்து 25 சதம் பாதிப்பு ஏற்படுத்துகிறது. களை இருப்பதால் தேவையற்ற உரம், தண்ணீர், ஆள் பற்றாக்குறை, பணச்செலவு இவைகள் விவசாயி களை இழப்புக்கு உண்டாக்குகிறது இதனால் விவசாயத்தில களைக் கட்டுபாடு; மிகவும் இன்றியமையாததாகும்.
களைகளை கட்டுப்படுத்தும் முறை
கோடைஉழவின் மூலம்- அகலமாகம் உழுவதைக் காட்டிலும் ஆழமாக உழுது பூமியில் உள்ள மேல் மண் கீழ் மண்ணாக மாற்றுவதால் பூமியில் மேல் உள்ள களைகள் கட்டுப்பட வாய்ப்புள்ளது. எருவை மக்க வைத்து போட வேண்டும். நிலப்போர்வை போட்டு களையை கட்டுப்படுத்தலாம். தண்ணீர் அளவாக பாய்ச்சலாம். வயல் அடித்து கட்டுப்படுத்தலாம். களைகளை பூக்குமுன் களையெடுத்து கட்டுப்படுத்தலாம்.நீல வாய்க்கால் பாசணத்தை குறைக்க வேண்டும்.
காலாரிஸ் எக்ஸ்ட்ரா என்ற களைக்கொல்லியை கொண்டும் களையை கட்டுப்படுத்தலாம்
காலாரிஸ் எக்ஸ்ட்ரா என்ற களைக்கொல்லி மக்காச்சோளத்திலும், கரும்பிலும் தோன்றக்கூடிய களையை கட்டுப்படுத்த புதியதாக கண்டுபிடித்துள்ள களைக்கொல்லியாகும்.
காலாரிஸ் எக்ஸ்ட்ரா என்ற களைக்கொல்லியை மக்காச்சோளம் நடவு செய்த 15 நாட்களுக்குள் தெளிக்கலாம்.
களைக்கொல்லி தெளித்த 3 வது நாளிலேயே கோரை, அருகு, பசலி முதலியவை வெண்மை கலந்த மஞ்சளாக மாற விடுகிறது.
அதன்பிறகு 7 வது நாளில் ஓரளவிற்கு காய்ந்து விடுகிறது. 15 நாட்களுக்குள் மக்காச்சோள பயிரில் உள்ள அனைத்துக் களைகளும் காய்ந்து விடுகிறது.
ஊடுபயிர் ஆமணக்கு, தட்டபயறு இவற்றில் பட்டால் கூட காய்ந்து விடும் இவை மக்காச்சோள பயிருக்கென்றே தயாரிக்கப்பட்ட களைக்கொல்லியாக இருப்பதால் மற்ற பயிர்களும் காய்ந்து விடும்.
பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற விகிதத்தில் ஒட்டு பசை சேர்த்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது அடிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 14 டேங்க் மருந்து அடிக்கலாம்;