மரவள்ளி கிழங்கு களை நிர்வாகம்

நடவு செய்த 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும் .அப்பொழுது முளைக்காத காரணிகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்துவிட வேண்டும் .பிறகு மூன்றாம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். நட்பு 60வது நாளில் செடிக்கு இரண்டு கிளைப்புமட்டும் விட்டு விட்டு மீதி அகற்றிவிடவேண்டும்.

வெள்ளை ஈ

இது மரவள்ளி தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மேலும் மாவுப்பூச்சி சிவப்பு சிலந்தி பேன் ஆகியவையும் மரவள்ளியை தாக்கும் .இதற்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம் .இதனால் வெள்ளை ஈ கட்டுப்படுத்தப்படும் அல்லது ஒரு ஏக்கருக்கு அபேக்கஸ் பாம்பே என்ற ஒட்டுண்ணியை 100 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
அறுவடை

இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும் இந்த நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவை அறுவடைக்கான அறிகுறியாகும்.

ஊடுபயிர்

வரப்பு ஓரங்களில் ஆமணக்கு துவரை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories