மல்லிகை செடிகளில் கவாத்து செய்யும் முறைகள்

 

 

மல்லிகையில் பூக்கும், தன்மை தட்பவெட்பநிலை, உர மேலாண்மை, வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் கவாத்து செய்தல் ஆகியவற்றை பொருத்து அமையும். செடிகளை கவாத்து செய்தலும் ஒரு முக்கியக் தோட்டக்கலை தொழில்நுட்பமாகும்.

மல்லிகைச் செடிகளை மார்ச்சு மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அதிகமாக பூக்கும்.

அதன் பிறகு அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை மகசூல் கொடுக்காது.

நவம்பர் மாத இறுதியில் மல்லிகைச் செடிகளை 45 சென்டி மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள அனைத்து தண்டுகளையும் கவாத்து செய்ய வேண்டும்.

செடிகளை மேமாதம் கவாத்து செய்து இலைகளை நீக்கி மூன்று நாட்கள் கழித்து தழைச்சத்து மற்றும் மணிச்சத்து 0.5 சதவீதம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
பிறகு செடிகளை வட்டவடிவில் சூரிய ஒளி நன்கு படும்படி செய்ய வேண்டும் .பிறகு தழை ,மணி, சாம்பல் சத்து முறையே 15: 15: 15 என்ற விகிதத்தில் ஒவ்வொரு நாளும் நீர் பாசனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது கவாத்து செய்த 25 முதல் 30 நாட்களில் மொட்டுகள் மலர ஆரம்பிக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories