கம்பு விதைகளை விதைக்க எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
தரமான கம்பு விதைகளை தேர்வு செய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் உப்பு கலந்த கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அதில் விதைகளை இட்டு மிதக்கும் பதரை நீக்கி விட்டு தரமானவற்றை சேகரித்து நல்ல தண்ணீரில் அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
செங்கரும்பு சொட்டு நீர் பாசனம் அமைக்கலாமா?
சொட்டு நீர் பாசனம் சிறந்தது. சொட்டுநீர் அமைப்பதனால் உரக் கரைசல் பயன்படுத்துவது எளிதாகிறது.
ஒவ்வொரு முறை களை எடுத்த பிறகும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டு நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
நெல் வயலுக்கு போடப்படும் புண்ணாக்கு அளவு என்ன?
நன்கு உடைத்து தூளாக்கி வேப்பம் புண்ணாக்கு 20 கிலோ தண்ணீருடன் கலந்து 12 மணி நேரம் ஊற வைத்த பின்னர் வயலுக்கு தெளித்தாலும் தழைச்சத்து நிலைத்து நின்று பயிருக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கும்.
டிரைக்கோடெர்மா விரிடி அடியுரமாக எவ்வாறு பயன்படுத்தலாம்?
ஒரு ஏக்கருக்கு டிரைக்கோ டெர்மா விரிடி 2 முதல் 3 கிலோ மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் 100 கிலோ வீதம் கலந்து பத்து முதல் பதினைந்து நாட்களிலும் நிழலில் வைத்து பிறகு நிலத்தில் ஈரம் இருக்கும்போது அடி உரமாக போடலாம்.
டிரைக்கோடெர்மா விரி டி ஒரு கிலோ வரை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்றலாம்.
காடைகள் இந்தப் பருவத்தில் முட்டையிட தொடங்கும்?
பெண் காடையானது ஏழாவது வாரத்தில் முட்டையிடத் தொடங்கும் எட்டாவது வாரத்தில் 50 சதவீத முட்டை உற்பத்தி துவங்கிவிடும்.
பெண் காடையானது 16 முதல் 24 மணி நேரத்திற்கு ஒரு முட்டையிடும் .காடைகள் மாலை வேளையில்தான் முட்டை இடும் . 22 மாத வயது வரை முட்டையிடும்.