காடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

“இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான காடை வளர்ப்பு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து, ஒரு நாள் இலவசப் பயிற்சிதேதி நடக்கிறது’ என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்  தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான காடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த, ஒரு நாள் பயிற்சி முகாம், நடக்கிறது. பயிற்சியில், ஜப்பானியக் காடை இனங்கள், கொட்டகை அமைத்தல், வளர்ப்பு முறைகள் பற்றி விளக்கப்படுகிறது.

 

 

 

 

மேலும், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கு தேவையான தீவன அளவுகள், முட்டைகள் சேகரித்து குஞ்சு பொரிக்கும் விதம், நோய்களும் அதை தடுக்கும் முறைகளும் மற்றும் ஜப்பானியக் காடை உற்பத்தி பொருளாதாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் அறிவியல் நிலையத்திற்கு, நேரில் வந்தோ  தொலைபேசி எண்கள் மூலமாகவோ, ஜூலை, 20ம் தேதிக்குள் பெயர் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள், ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories