கேரட் பயிரிடுவது எப்படி

 

ரகங்கள் மலைப் பகுதிகளுக்கு ஊட்டி ,நியூ ஒருடா ஆகிய ரகங்கள் ஏற்றவை .சமவெளிப் பகுதிகளுக்கு இந்தியா கோல்ட், புல்சர் போன்ற ரகங்கள் ஏற்றவை.

பருவம்

கேரட் சாகுபடி செம்மண் மிகவும் உகந்ததாகும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும்.

நிலம் தயார் செய்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும் .ஒரு எக்டருக்கு அடியுரமாக 30 டன் தொழு உரத்தை மண்ணுடன் கலக்க வேண்டும். பிறகு 90 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 90 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும் .இதனுடன் 25 கிலோ சல்ஃபேட்செல்பி எடுக்கும் இடவேண்டும்.
விதை அளவு

ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைத்தல்

மலைப்பகுதிகளில் தேவையான அளவுக்கு நீளஅகலம் உள்ள மேட்டுப் பாத்திகள் அமைத்து விதைக்கவேண்டும். சமவெளிப் பகுதிகளில் பார் பிடித்து 5 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். விதைகளை விதைக்கும் போது ஒரு பங்கு விதைக்கு நான்கு பங்கு மணல் கலந்து விதைக்க வேண்டும். விதைகள் விதைத்து 15 நாள் கழித்து குழிக்கு வளமாக ஒரு செடி விட்டு மீதியை கலைத்துவிட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் விட வேண்டும் .அதன் பிறகு 5நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories