நான்கு அல்லது 5 வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது ஜீரணத்துக்கும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும். இழந்த சக்தியை மீட்டுத் தரும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை அரைத்து நெற்றி பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
சவுச்சவ் பயன்கள்
தினசரி உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு சீக்கிரமே உடல் கொழுப்பு குறைந்து ஒரு சரியான வடிவமைப்புக்கு திரும்புவார்கள்.
இரத்த சோகைக்கு காரணமான இரும்புச்சத்து குறைபாடு மற்றும் விட்டமின் பி2 குறைபாடு இரண்டையும் ஈடு கட்டி இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும் சக்தி கொண்டது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
அதிக அளவு விட்டமின் சி போலேட் உள்ளன .இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
இதை முறையாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் பி9 சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.