பந்தல் தக்காளி சாகுபடியில் விவசாயின் அனுபவம்

பந்தல் தக்காளி சாகுபடியில் விவசாயின் அனுபவம்
தற்பொழுது அனேக இடங்களில் மழை பெய்துகொண்டு இருக்கிறது இப்பொழுது தக்காளி விவசாயிகள் பயிரிடமாட்டார்கள் நாம் நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றால் பந்தல் முறையில் சாகுபடி செய்யலாம். தக்காளியில் பந்தல் அமைப்பதால் விவசாயிகளுக்கு அதிகச் செலவுகள் ஆகுமென்று நினைத்துக்கொண்டு சாதா முறையில் தக்காளி சாகுபடி செய்கிறார்கள். அதில் பழங்கள் வெயிலுக்கு வெம்பி விடுகிறது மற்றும் எலி, கோழி, அழுகல் போன்ற பாதிப்புகளும் வருகிறது. இவற்றை போக்க தக்காளிக்கு பந்தல் முறை அமைத்து சாகுபடி செய்யலாம் மழைக்கு அழுகல் ஏற்பட வாய்ப்பு இல்லை.
விவசாய செலவுகளை குறைக்க நம்முடைய வயலில் நாமே இறங்கி வேலை செய்வது நல்லது.; மிக குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை செய்து முடிக்கவும் முடியும.; காலை 5.30 மணிக்கு வேலையை ஆரம்பித்து கடும் வெயில் வரும் சமயத்தில் வீட்டு வேலைகளை செய்யலாம். அதேபோல மாலை 4.30 மணிக்கு மேல் திரும்பவும் வேலைகளை செய்யலாம் நமக்கு இளம்நேரத்தில் வேலைசெய்தால் எந்தவித சோர்வும் தெரியாது அதிகவேலையும் செய்து முடிக்கலாம்
இவ்வாறு தினமும் வேலை செய்தும்பொழுது மாறுபட்டு வித்தியாசம் செடிகளில் இருந்தால் இவை எதனால் ஏற்படுகிறது தொடர்ந்து நம்முடைய வயலை பார்வையிடும்பொழுது ஏதாவது பூச்சி நோய் தாக்குதல் தெரிகிறதா என்பதையும் கவனித்து ஆரம்ப காலத்திலேயே அவற்றை கட்டுப்படுத்தலாம்
இலைக்கருகல், வாடல் தென்பட்டால் சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் மாலை வேளையில் தெளித்தால் அவற்றை கட்டுப்படுத்தலாம் இதேபோல சாறுஉறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருந்தால் மஞ்சள் அட்டை ஒரு எக்கருக்கு 10 இடங்களில் வைத்து கவர்த்து கட்டுப்படுத்தலாம்
தக்காளியில் இளம் புழுக்கள் தென்பட்டால் ஆரம்பத்தில் சிறு சிறு புழுக்களை நசுக்கி விடலாம் அவை பெரிதாகி சேதம் விளைவிக்காமல் இருக்கும் அப்படியே பெரிய புழுவாக வந்துவிட்டால் அவற்றை கையால் பொருக்கி அழித்து விடலாம். அல்லது பிவேரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் தெளிக்கலாம.; அல்லது இனக்கவர்ச்சி பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
வைரஸ் செடிகள் பாதிப்பு இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு அடுத்த செடிகளுக்கும் பரவாமல் பார்த்துக்கலாம் இவ்;வாறு நாம தடுப்பு முறைகளைப் தெரிந்து கொள்ளலாம்
நான் தக்காளியை தொடர்ந்து பயிரிட்டு நல்ல லாபம் அடைந்துள்ளேன் அடுத்தஅடுத்த வயல்களில் மாற்றி மாற்றி தக்காளி போட்டு வருகிறேன்.
தக்காளி நாற்று போட்டு 20 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை எடுத்துவந்து வரிசைக்கு வரிசை 5 அடியும் செடிக்குசெடி 2 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
அவ்வாறு நடவு செய்து திரும்பவும் 20 நாட்கள் கழித்து வயலின் ஆரம்ப முதல் வயல் முடியும் வரை இரண்டு பக்கமும் வரிசைக்கு வரிசை இரண்டு ஓரத்திலும் சவுக்கு குச்சிகளை நடவு செய்து( அல்லது மூங்கில் கம்புகளை ஊன்றலாம்); படத்தில் உள்ளவாறு கம்பிகளை கட்டிவிட வேண்டும். பிறகு ஒவ்வொரு செடியின் அடியிலையில் கயிறுகளை கொண்டு கட்டி கம்பியில் தூக்கிகட்டி விடவும் இவ்வாறு செய்தால் தக்காளி பழம் அழுகாது, வெப்பம் தாக்காது மழை பெய்தால் கூட பழம் கெடாமல் இருக்கும் மகசூல் கூடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories