பீர்க்கங்காய் பயிரிடுதல்

 

 

இந்தப் பயிருக்கு ஜூன் ,டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் ஏற்றது .இந்தப் பயிரை கோடை மழைக் காலங்களிலும் சாகுபடி செய்யலாம் .கோடைக்காலங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நிலம் தயார் படுத்துதல்

நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழுது 2.5 மீட்டர் இடைவெளியில் 60 சென்டி மீட்டர் அகலம் உள்ள வாய்க்கால்களை எடுத்து நிலத்தை தயார் படுத்த வேண்டும் .பிறகு வாய்க்காலில் 45 சென்டி மீட்டர் ஆழம், அகலம் ,நீளம் உள்ள குழி களை 1.5 சென்டி மீட்டர் இடைவெளியில் எடுத்து அதில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தை மேல் மண்ணுடன் சேர்த்து இட்டு நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.

விதை அளவு
ஒரு எக்டருக்கு 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும்.

விதைத்தல்

ஒரு குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்த உடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுகள் வளர்ந்த உடன் வாய்க்கால் மூலம் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்..

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories