நடவு செய்த 120 முதல் 130 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம் .பத்து நாட்களுக்கு முன்பே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும் .பூண்டு செடியின் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறி பிறகு இலைகள் முழுவதும் காய்ந்து விடும். இந்த நிலையில் பூண்டுகுமிழிகளை கைகளால் பிடிங்கி குவித்து வைக்க வேண்டும். இலை உரைகளைக் குமிழிகளுக்கு அருகில் 12 சென்டிமீட்டர் அளவு இருக்குமாறு வெட்ட வேண்டும் பிறகு வெயிலில் ஒரு வாரத்திற்கு உலர்த்தி அளவு மற்றும் எடையைப் பொறுத்து தரம் பிரிக்க வேண்டும்
மகசூல்
எக்டருக்கு 8 முதல் 10 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்