அவரை செடியில் பூ மற்றும் காய்களை வண்டுகள் சேதம் செய்கிறது .அதற்கு இயற்கை முறையில் மருத்துவம் என்ன?

அவரை செடியில் பூ மற்றும் காய்களை வண்டுகள் சேதம் செய்கிறது .அதற்கு இயற்கை முறையில் மருத்துவம் என்ன?

வாரம் ஒருமுறை தசகாவிய கரைசலைத் தெளிக்கலாம்.

விளக்குப் பொறி வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

மா மரத்தில் உள்ள காய்களின் கருப்பு நிறத்தில் புள்ளிகள் உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்?

வாரம் ஒரு முறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

தென்னையை நடவு செய்து ஐந்து வருடம் ஆகின்றது .இன்றுவரை கிடைக்கவில்லை.பாளை யிலிருந்துபூ கொட்டுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்?

தேமோர் கரைசல் வேரின் வழியாக கொடுக்கலாம்.

மஞ்சள் நிற பூக்களை கொண்ட பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தேனீக்களை அந்த பூக்கள் கவர்ந்திழுக்கும். தேனீக்கள் இருப்பதால் தென்னையில் மகரந்தச்சேர்க்கை அதிக அளவில் நடைபெறும் அதிக காய்கள் உருவாகும்.

பசுந்தாள் உரங்களை பயிரிட்டு அதனை பூக்கும் சமயத்தில் மடக்கி உழுவதன் மூலம் அதிக தழை, மணி, சாம்பல் சத்து கிடைக்கிறது.

தினசரி ஒரு கிலோ அசோலா எடுக்க வேண்டும் எனில் தொட்டியின் நீளம் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்?

செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கிய 6 மீட்டர் x 3 மீட்டர் அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும் .இந்த தொட்டியில் அசோலா வளர்ப்பதன் மூலம் தினமும் ஒரு கிலோ அசோலா அறுவடை செய்யலாம்.

மா நடவு செய்த 3 வருடம் ஆகிறது பூக்கவில்லை காய்க்கவில்லை என்ன காரணம்?

காய்கள் வைக்கும் காலம் ஒவ்வொரு ரகத்திற்கும்மாறும்.

மரத்தைச் சுற்றிலும் உள்ள சருகுகளுக்கு தீ வைத்து புகைமூட்டம் போடவும். இதன்மூலம் மா மரம் பூ வைக்கும்.

தேமோர் கரைசல் வே ரின் வழியாக கொடுக்கவும். இதன் மூலம் பூக்கள் வைத்து காய்கள் அதிகம் பிடிக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories