கால்நடைகளுக்கு ஏற்படும் காசநோய் – அதற்கான தடுப்பு முறைகள்!

நோய்க்கான காரணங்கள்:

இந்த நோய் மைக்கோபாக்டீரியம், டீயு பெர்குளோசிஸ் என்னும் ஒருவகை நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது .இக்கிருமிகள் மாடுகளை பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன.

இந்த நோய் கிருமிகள் நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும் மாட்டோடு நெருங்கிப் பராமரித்தாலும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. ஆகவே இந்த நோய் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நோயின் அறிகுறிகள்:

பாதிக்கப்பட்ட மாடுகளில் விட்டு விட்டு லேசான காய்ச்சல் இருக்கும்.

மாடு மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும் . இருமல் , மூச்சுத் திணறல் ஏற்படும்.

மார்பில் உள்ள நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும். குடற்பகுதி பாதிக்கப்படும் அதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மடி பாதிக்கப்பட்டால் மடியில் கட்டிகள் ஏற்பட்டு பாலின் தன்மை கெட்டுப்போகும்.

பாதிக்கப்பட்ட மாடுகள் நோய்க் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.

தடுப்பும் பாதுகாப்பும்:

தொடர்ந்து இளைத்து கொண்டே வரும் மாடுகளை பரிசோதனைக்கு உட்படுத்தி காசநோய் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.

நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளை காசநோய் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

சுற்றுப்புற சுகாதாரம் நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.

மாடுகளுக்கு தேவையான அளவு தரமான தீவனம் அளிக்கவேண்டும் .போதுமான அளவில் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.

காற்றோட்ட வசதி நல்ல தீவனம் இவை இரண்டும் இந்த நோய் தடுப்பில் பெரிதும் உதவுகின்றன.

கன்று பிறந்த 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories