நீர்த்த,துர்நாற்றமுடைய கழிச்சல் காணப்படும். வால் மற்றும் பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கால்நடைகள் சோர்ந்து காணப்படும்.
கலவை 1
சீன்ன சீரகம்-15 கிராம்
கச கச =10 கிராம்
வெந்தயம்-15 கிராம்
மிளகு-5 எண்ணிக்கை
மஞ்சள்-5 கிராம்
பெருங்காயம்-5 கிராம்
மேற்கண்ட பொருட்களை நன்கு கருகும் வரை வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும்.
கலவை 2
வெங்காயம்-5
புளி-100 கிராம்
பூண்டு -5 பல்
மேற்கண்ட பொருட்களை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
சிகிச்சை முறை :
இந்த இரு கலவைகளையும் 100 கிராம் கறுப்பட்டி (பனை வெல்லம்) சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக கல் உப்பினில் (தேவைப்படும் உப்பு -15 கிராம்) தோய்த்தெடுத்து நாக்கின் மேல் பகுதியில் தேய்த்த வண்ணம் ஒரே வெளியில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்.