கோழிகளுக்கு ஏற்படும் வாத நோயை எவ்வாறு சரி செய்வது?

நெல் நுண்ணுட்ட கலவையை அடி உரமாக இடலாம? எப்படி இடலாம்?

நெல் நுண்ணூட்டக் கலவையை அடியுரமாக இடக்கூடாது.

நெல் நுண்ணூட்ட கலவையை ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அளவு 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன்பு சீராக தூவ வேண்டும்.

ஏலக்காய் ப யிரை எப்படி நடவு செய்ய வேண்டும்? எப்பொழுதுகாய்க்க தொடங்கும்?

ஏலக்காயின் நாற்றுகள் மற்றும் ஓட்டுக்கன்றுகளைக் கொண்டு இனப்பெருக்கம் செய்து நடவு செய்யலாம்.

ஏலக்காயின் நடவு செய்து 3 வருடத்தில் மே -ஜூன் மாதங்களில் பூ பூத்து காய்க்க தொடங்கும். காய்கள் நன்கு திராட்சையானது ஆக முற்றுவதற்கு 8 மாதங்கள் ஆகும். பிறகு மாதம் ஒரு முறை காய்களை அறுவடை செய்யலாம்.

எலுமிச்சையில் இலை துளைப்பான் எப்படி கட்டுப்படுத்துவது?

ஒரு கிலோ கிராம் வேப்பம் புண்ணாக்கு தூளை 10 முதல் 20 லிட்டர் தண்ணீரில் ஒருவார காலம் ஊறவைத்து கிடைக்கும்சாற்றை வடிகட்டி மரத்தின் இலைகளின் மீது தெளித்தால் எலுமிச்சையில் இலைத் துளைப்பானைக் கட்டுபடுத்தலாம்.

விதை உறக்கம் என்றால் என்ன?

விதை முளைப்புக்கேற்ற தகுந்த சூழ்நிலை மற்றும் காரணிகள் இருந்த போதிலும் உயிருள்ள விதைகள் முளைக்காமல் இருப்பது விதை உறக்கம் எனப்படும்.

குறிப்பாக சில நெல் ரகங்கள் ,எண்ணெய் வித்துப் பயிர்கள் ,தீவனப்பயிர்கள் மற்றும் மர வகை பயிர்களில் விதை உறக்கம் இருக்கும். இந்த விதை உறக்கம் குறிப்பிட்ட கால அளவிற்கு பிறகு இயற்கையாகவே நீங்கிவிடும்.

கோழிகளுக்கு ஏற்படும் வாத நோயை எவ்வாறு சரி செய்வது?

வாதம் நச்சுயிரி ஏற்படும் ஒருவித தொற்று நோய் .தீவனம், குடிநீர், காற்று மூலம் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான கோழிகள் வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும். மூச்சுத்திணறல், நடுக்கம்,வாதம் போன்றவை தோன்றும்.

கோழிகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு கிராம் மஞ்சள் தூள் 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். 10 கிராம் சீரகம் 5 கிராம் அளவு மஞ்சள் தூள் கீழாநெல்லி,வெங்காயம்,பூண்டு 5 பல் ஆகியவற்றைக் கலந்து அரைத்து கலவை தீவனமாக கொடுக்க வேண்டும். மேலும் கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி தடுப்பூசிகளை அளிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories