மடி அம்மை -அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

நோய்க்கான காரணங்கள்:

சில கரவை மாடு கன்று ஈன்றவுடன் மடி அம்மை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கறவை மாடுகளின் மடியில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டால் அதன் பாதிப்பால் சரியாக பால் கரக்க படாமல் மடி நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கோமாரி, வாய் சப்பை நோய் கண்ட மாடுகளில் அம்மை கொப்பளங்கள் காணப்படும்.

இந்த அம்மை கொப்பளங்கள் சிறியதாக இருக்கும் போது சரியாக கவனித்து மருத்துவம் செய்யாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.

அறிகுறிகள்:

காய்ச்சல் ஏற்படும்.

மடியிலும் காம்புகளிலும் முதலில் நுண்ணிய சிவப்பு புள்ளிகள் தோன்றி விரைவில் கொப்புளங்களாக மாறும். கவனிக்காவிட்டால் அவை நாளடைவில் புண்களாக மாறிவிடும்.

தடுக்கும் முறைகள்:

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்து பொருட்கள்

திருநீற்றுபச்சிலை 10 ,துளசி 10 ,வேப்பிலை கொழுந்து 10 ,பூண்டு 4 பல்லு, மஞ்சள் தூள் 10 கிராம், வெண்ணெய் 50 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை:

மேற்கண்ட வெண்ணை இல்லாமல் ஒன்று சேர்த்து அரைத்து நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணை கலந்து கொள்ளவும்.

இந்த மருந்தை ஒரு நாள் முழுவதும் பாதிக்கப்பட்ட மாடுகளின் மடியில் தேய்த்துப் பயன்படுத்தலாம்.

இதை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் .மறுநாள் புதிதாக மருந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

மடிக் காம்பில் அம்மை ஏற்பட்ட கால்நடைகளின் அடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரமில்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்துகள் கலந்த வெ ண்ணையை கையிலெடுத்து அம்மை உள்ள பகுதியில் மென்மையாக தடவ வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாட்டின் மடி காம்புகளில் கொப்புளம் மற்றும் வெடிப்பு ஏற்பட்டால் அந்த சமயத்தில் காம்பை அழுத்தி பால் கறக்க கூடாது .கவனமாக காயம் பெரிதாகாமல் பாலை கறக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories