மழைக்காலங்களில் கால்நடைகளைக் கலங்கடிக்கும் எலிக்காய்ச்சல் – கட்டுப்படுத்தும் முறை!

தமிழ்நாட்டில் பருவ மழைக்காலங்களில் கால்நடைகள் மற்றும் மனிதர்களில் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய நோய்களில் எலிக்காய்ச்சல் முக்கியமானது.

இதனைத் தடுக்க கால்நடை வளர்ப்போர் மழைக்காலங்களில் தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

நோய் பரவும் விதம் (Spread of Disease)
பெரும்பாலும் எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட கால் நடைகளின் சிறுநீர் மூலமாகவே எலிக்காய்ச்சல் நோய் ஆரோக்கிய மான விலங்குகள் அல்லது மனிதர்களுக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சிறுநீரில், இக்கிருமிகள் அழியாமல் நீண்ட காலம் காணப்பட, மழையும் மித மான வெப்ப நிலையும் நன்கு உதவி செய்கின்றன.

அறிகுறிகள் (Symptoms)
இளங்கன்றுகள்ளில் காய்ச்சல், பசியின்மை, சிறுநீரில் இரத்தம் வெளிப்படுதல், இரத்தச் சோகை மற்றும் மஞ்கள் காமாலை ஆகியவை.

கறவை மாடுகளில் பால் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விடுதல் அல்லது முற்றிலும் நின்று விடுதல், மடிநோய், இரத்தம் கலந்த பால் வெளிப்படுதல் மற்றும் சினை மாடுகளில் கருச்சிதைவு போன்றவை காணப்படும் எனவே,

இதற்கு சிகிச்சை அளிக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் ஓரிரு நாட்களில் இறக்க நேரிடும்.

நோய்த்தடுப்பு முறைகள் (Immunization methods)
பண்ணையில் சிறுநீர் மற்றும் சாணம் போன்றவற்றைச் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

தூய்மையான குடி நீரையே கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.

பண்ணையில் நாய்கள் வளர்த்தால் நாய்களுக்குக் எலிக்காய்ச்சல் தடுப்பூசியை வருடத்திற்கு ஒரு முறை போடவேண்டியது கட்டாயம்.

கால்நடை வளர்ப்போர் சுகாதாரமான முறையில் கால்நடைகளைக் கையாள வேண்டும்.

தேங்கிய நீர்நிலை மற்றும் சேற்று நிலம் ஆகியவற்றைத் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் எனவே,

மழைநீரும் கழிவு நீரும் கலந்த நீரில் கால்நடைகளும் மனிதர்களும் நடமாடக் கூடாது என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories