மழைக்காலத்தில் ஆடுகளைத் தாக்கும் ஆட்டுக் கொள்ளைநோய்!

மழைக்காலம் என்றாலே கால்நடைகளுக்கு அதிக அளவில் நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதிலும் ஒரு சில நோய்கள் ஆடுகளை அதிக அளவில் தாக்குகின்றன .அத்தகைய நோய்களில் ஒன்றான ஆட்டு கொள்ளைநோய் பற்றி இங்கு காணலாம்.

ஆட்டுக் கொள்ளைநோய்

ஆட்டுக் கொள்ளைநோய் மார்பில் என்ற ஒரு வகையும் நச்சுயிரியால் ஏற்படுகிறது.

இது ஒரு ஆடுகளுக்கு ஏற்பட்டால் மற்ற நாடுகளுக்கும் பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.

வெள்ளாடுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும். செம்மறி ஆடுகளின் இந்த நோயால் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை.

நோய்க்கான காரணங்கள்

இந்த நோயை ஏற்படுத்தும் நச்சுயிரி அசுத்தமடைந்த தீவனம், தண்ணீர் படுக்கை, பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது.

பாதிக்கப்பட்ட ஆடுகளின் மூக்கு, வாய், ஜீரண மண்டலத்தில் இருந்து வெளியேறும் திரவம் சாணம் போன்றவற்றை நச்சுயிரிகள் அதிகமாக காணப்படும்.

முக்கியமாக சாணம்இந்த நோயை ஏற்படுத்தும். நச்சு உயிரியை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புதிதாக வாங்கப்பட்ட நோய் பாதிக்கப்பட்ட ஆட்டின் மூலம் பண்னை க்கொள் இந்த நோய் எளிதில் பரவ வாய்ப்புண்டு.

காட்டில் வாழும் அசைபோடும் பிராணிகளும் இந்த நோயை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நோய் அறிகுறிகள்

இந்த நோய் தாக்கப்பட்ட ஆடுகள் அதிக காய்ச்சலுடன் காணப்படும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளின் தோல் உலர்ந்தும் மூக்கு மேல் தடித்தும் காணப்படும் .இந்த நோயால் ஆடுகள் தீவனம் எடுத்துக்கொள்ளாமல் பசியின்றி காணப்படும்.

ஆடுகள் உதடுகள் வாய் ஜவ்வுகள், ஈறுகள், தாடை, உட்பகுதி நாக்கு போன்றவற்றில் ஏற்படும்புண்கள் அழுகி துர்நாற்றம் வீசும்.

ஆடுகளுக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டு ஆடுகள் மூச்சுவிட சிரமப்படும் .பாதிக்கப்பட்ட ஆடுகளை சாணத்தில் சளி மற்றும் ரத்தம் கலந்து காணப்படும்.

 

சினை உடன் இருக்கும்வெள்ளாடுகளில் குட்டிகள் வீசுதல் ஏற்படும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆடுகள் நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு விடும். ஆனால் சில ஆடுகள் இறந்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

ஆட்டுக் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட ஆ டுகளை மற்ற ஆ டுகளிலிருந்து தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்.

அருகிலுள்ள மேலும் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் இருத்தல் நல்லது .அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கவேண்டும்.

தடுப்பு முறைகள்

ஆடுகளுக்கு முறையான இடைவெளியில் சரியாக தடுப்பூசி அளிக்க வேண்டும்.

புதிதாக வாங்கிய ஆடுகளை பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் உடனடியாக சேர்க்காமல் தனியாக பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories