மாடுகளின் மடிநோய்க்கு மகத்தான மருந்து- தயாரித்தல்!

மாடுகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானதாகக் கருதப்படும் மடிநோய்க்கு இயற்கை முறையில் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients)
சோற்றுக்கற்றாழை – 250 கிராம்,
மஞ்சள் – 50 கிராம்
(கிழங்கு அல்லதுபொடி,)
சுண்ணாம்பு – 15 கிராம்,
எலுமிச்சை – 2,
வெல்லம் -100 கிராம்

தயாரிப்புமுறை (Preparation)
முதல் மூன்று பொருட்களையும் சேர்த்து சிவப்பு பசைபோல, அரைத்துக்கொள்ளவும். இரண்டு எலுமிச்சையையும் இரண்டாக நறுக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை (Using Method)
அரைத்த கலவையை ஒரு கையளவு எடுத்து அதனுடன் 150-200 மிலி தண்ணீர் சேர்த்துக் கலக்கவும் மடியைக் கழுவி சுத்தம் செய்து, மடி முழுவதும் கலவையைத் தடவி விடவும்.

மீண்டும் இதே முறையை என நாள் ஒன்றுக்கு,10 தடவை வீதம், 5நாட்களுக்கு செய்ய வேண்டும்.

தினமும் இரண்டு எலுமிச்சையை ஒரு நாளுக்கு இருமுறை வீதம் 3 நாட்களுக்குக் கொடுக்கவும்

பாலில் இரத்தம் வந்தால் மேற்கண்டவற்றுடன், இரண்டு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் வெல்லம் இரண்டையும் பசையாக அரைத்து, வாய் வழியாக ஒரு நாளுக்கு இரண்டுமுறை நிலைமை சீரடையும் வரை கொடுக்கவும்.

இந்த மருந்து மடிநோய்க்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories