மாடுகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோய்க்கான காரணங்கள்!

குடலில் நோயினை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா, வைரஸ் ,பூஞ்சைகள் ,குடற்புழு , ரசாயனங்கள் விஷத்தன்மை வாய்ந்த பொருட்களால் இந்த நோய் ஏற்படுகிறது.

மாடுகளின் குடல் உட்பகுதியில் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற படலத்தின் தொடர்ச்சி காரணமாகும் மாடுகளுக்கு கழிச்சல் இரத்தத்துடன் கூடிய கழிச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதுடன் மேற்கூறிய கோளாறுகளாலும் அவற்றின் உடலில் அமில கார சத்துக்களின் சதவீதம் மாறுபடுகின்றன இதர கோளாறுகளும் ஏற்படுகின்றன.

அறிகுறிகள் நோய் அறிகுறிகள்

நீர்த்த துர்நாற்றம் உடையும் கழிச்சல் மாடுகளுக்கு ஏற்படும்.

வயிற்றுவலி ,காய்ச்சல் ,நீர்ச்சத்து பற்றாக்குறையும், தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகளும் ,மாடுகள் சோர்ந்து காணப்படும்.

சாணம் மென்மையாக, திரவமாக காணப்படுதல், வால் மற்றும் பின்னங்கால்களில் சாணம் கரை படிந்து காணப்படும்

சாதனத்தில் ரத்தப்போக்கு சாணத்தில் மண் மற்றும் கோழை போன்ற பொருட்கள் காணப்படும்.

சாணம் வெளிர் மஞ்சள் நிறமாக இருத்தல், சில சமயங்களில் இரத்தத்துடன் காணப்படும்.

மாடுகளின் தொடை பகுதியில் சாணம் ஒட்டிக்கொண்டிருக்கும்.

நோய்த் தடுப்பு முறைகள்

ஒரு மாடுக்கு அல்லது 3 கன்றுகளுக்கு சின்ன சீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம் ,வெந்தயம் 10 கிராம் ,மிளகு 5 எண்ணிக்கை ,மஞ்சள் 5 கிராம் பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து நீர் தெளித்து இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வெங்காயம் 2 பூண்டு 2 பல் க ருவேப்பிலை பத்து இலை ,பனை வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரு கலவைகளையும் கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் போட்டு எடுத்து மாட்டின் நாவில் சொரசொரப்பான மேல் பகுதியில் தேய்த்த வண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories