ஒரு கிலோ துளசி இலையுடன் 10 கிராம் சுக்கு சேர்த்து அரைத்து 4 படி தண்ணீர் கலந்து மாடுகள் குளிப்பாட்டிய பிறகு உடல் முழுவதும் தேய்க்க உன்னி ஒட்டாது. பிறகு சாம்பிராணி புகை காட்ட வேண்டும்.
வேர்க்கடலை பயிரில் எலி மற்றும் பறவைகளின் தொல்லை அதிகமாக உள்ளது.
கருவாட்டை சூட்டு பிறகு பொடித்து அதனுடன் சம அளவில் சிமெண்ட் கலக்க வேண்டும். இக்கலவையை எலி வரும்பகுதிகளில் சிறுசிறு குவியலாக வைக்கவேண்டும் .எலிகள் கருவாட்டு வாசனை ஈர்க்கப்பட்டு இந்த கலவையை உண்டு இறந்துவிடும்.
பச்சைப்பயிறு எந்த மாதம் சாகுபடி செய்ய வேண்டும்.
பச்சைப்பயிறு ஆடி புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.
தாது உப்புக் கலவையை கோழி தீவனத்துடன் கலந்து கோழிகளுக்குப் கொடுக்கலாம.
கோழிகளுக்கு தாது உப்பு கலவை கொடுக்கலாம். இந்தத் தாது உப்பு கலவையுடன் கால்சியம் ,பாஸ்பரஸ், விட்டமின் சி, மற்றும் விட்டமின் இ கலவையை கலந்து கொடுக்கலாம்.