மாடுகளுக்கு கழிச்சல் ஏற்படாமல் இருக்க என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?

பசுந்தாள் உரம் என்று ஏன் சொல்கிறார்கள்?

பசுந்தழைகளின் மூலம் பெறுவதாலும் ,பசுமையான, சிதைக்கப்படாத பொருட்கல் மூலம் பெறுவதாலும் பசுந்தாள் உரம் என சொல்லப்படுகிறது.

பயறு வகை போன்ற பயிர்களை நேரடியாக வளர்த்தும், தரிசு நிலம் ,வயல் வரப்பு ,காடுகளில் வளரும் மரங்களில் இருந்தும் பசுந்தாள் உரத்தை பெறலாம்.

இதில் சணப்பு, தக்கைப்பூண்டு, பில்லி ,பயறு, கொத்தவரை அ,கத்தி , போன்ற பயிர்கள் அடங்கும்.

நிலக்கடலை சாகுபடி செய்ய ஏற்ற பட்டங்கள்?

(டிசம்பர் -ஜனவரி மார்கழி (பிப்ரவரி- மார்ச் மாசி (ஏப்ரல் -மே சித்திரை ஆகிய படங்களில் இறவைப் பயிராக நிலக்கடலையை பயிரிடலாம்.

(-ஏப்ரல் மே சித்திரை (ஜூன் -ஜூலை முன் ஆடி (ஜூலை-ஆகஸ்ட் பிறகு ஆடி ஆகிய பட்டடங்களில் மானாவாரி பயிராகவும் நிலக்கடலையை பயிரிடலாம்.

பாரம்பரிய நெல் ரகங்கள் என்னென்ன?

மாப்பிள்ளை சம்ப, கருப்பு கவுனி ,பூங்கார், தூயமல்லி, குள்ளக்கார் ,குழியடிச்சான், துளசி வாசனை சீரக சம்பா, வாளால சம்பா, ராஜபோகம், இலுப்பை சம்பா, சேலம் சன்னா, கருங்குருவை ,காளான் நமக்கு, நவர போன்றவை பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும்.

விவசாயத்தில் நுண்ணுயிரி உரங்களின் பங்கு என்ன?

பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய உயிரி உரம் பெரிதும் பயன்படுகிறது.

மண்ணில் தழைச்சத்தை நிலைபடுத்துவதுடன் மண்ணிலுள்ள கரையாத மணிச் சத்துக்களை நுண்ணுயிர் உரங்கள் கரைத்து பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

ஒரு சில நுண் உயிரி உரங்கள் மண்ணில் பயிரின் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது .மேலும் மண் , சுற்றுப்புறக் சூழ்நிலையின் வளத்தை மேம்படுத்துகிறது.

மாடுகளுக்கு கழிச்சல் ஏற்படாமல் இருக்க என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?

கெட்டுப்போகாத தீவனம் மற்றும் நல்ல குடிநீர் கிடைக்க வழி செய்யவேண்டும்.

மழைக்காலம் அல்லது பனிக்காலங்களில் மேய்ச்சலுக்கு காலை 10 மணிக்கு மேல் அனுமதிக்க வேண்டும்.

நாற்றமுள்ள கழிச்சல் ஏற்படாமலிருக்க முறையாக குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories