சிவப்பு மூக்கு நோய்!
சிவப்பு மூக்கு நோய் போவேன் ரினிடிரெஷைபுஷ் தொற்று என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
இந்த நோய் மாடுகளுக்கு வைரசால் ஏற்படுகிறது.
நோய் ஏற்பட்டால்…
மாடுகளின் தலையில் வாயுக்களை ஏற்படுத்துகிறது.
மேலும் பசு மாடுகளின் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது.
இந்த நோய்க்கு தடுப்பூசி உகந்த தீர்வாகும்.
தடுப்பூசி கொடுக்கப்படாவிட்டால் இந்த நோய் தாக்கிய கால்நடைகளை காப்பாற்றுவது கடினம்.
சினை மாடுகளுக்கு நாசி வழியே செலுத்தும் தடுப்பூசி அளித்தல் அவசியமான ஒன்றாகும்.
மாடுகளின் கலப்பிற்கு 30 முதல் 60 நாட்கள் முன்பு ஒரு இளம் பசுக்களுக்கு தடுப்பூசி அளித்தல் அவசியம்.
எருமை மாட்டு பால்!
எருமை மாட்டு பால் நாட்டு பசுவின் பாலைக் காட்டிலும் தி டமும் கொழுப்பு சத்தும் கொண்டது.
ஆனால் எருமைப்பாலில் ஊட்டச்சத்து அதிகம்.
தண்ணீர் கலந்தாலும் நீர்த்துப் போகாத தன்மையும் எருமைப் பாலுக்கு உண்டு.
கோடைக்காலத்தில் கறவை மாடுகளுக்கு…..
கோடை காலத்தில் மாடுகளுக்கு வைக்கோல், காய்ந்த சோளத்தட்டு போன்ற நார்ச்சத்துள்ள தீவனங்களை பகல் வேளையில் தீவனமாக அளிக்க கூடாது.
இந்த வகை தீவனங்கள் மாடுகளின் உடலில் வெப்பத்தை அதிகரித்து பால் உற்பத்தியை குறைத்துவிடும். இவற்றை இரவு வேளையில் தீவனமாக அளிக்கலாம்.
பகலில் புரதச்சத்து நிறைந்த வேலிமசால், தட்டைப்பயறு செடி ,முயல் மசால் மற்றும் அகத்தி போன்ற
பசுந்தீவனங்களை மற்றும் கோ-4 புல் தீவனச் சோளம் ஆகியவற்றை கலந்து ஒரு மாட்டிற்கு 20 கிலோ என்ற அளவில் தீவனமாக தரலாம். இதனால் மாட்டின் உடல் வெப்பம் அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.