பொதுவாக கால்நடைகளுக்கு சிறிது சிறிதாக சில பிரச்சனைகள் ஏற்படும் அதிலும் வாய்ப்பும் பெருமளவில் ஆடுகளை அதிக பிரச்சினைகளை ஏற்படுகின்றன இந்த பிரச்சனையை இயற்கை முறையில் நாமே மருந்து தயாரித்துப் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
ஆடுகளுக்கு ஏற்படும் வாய்ப்புண்ணை குணப்படுத்த வேப்ப எண்ணெய் 100 மில்லி கஸ்தூரி மஞ்சள் 25 கிராம் திருநீற்றுப்பச்சிலை இலை ஒரு கைப்பிடி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கஸ்தூரி மஞ்சள் மற்றும் திருநீற்றுப் பச்சிலை இலை ஆகிய இரண்டையும் ஒன்று சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் ஒரு பாத்திரத்தில் வேப்ப எண்ணெய் 100 மில்லி ஊற்றி சிறிது சூடுபடுத்த வேண்டும் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு மூன்று நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும் அதன் பிறகு ஆறியபின் வடிகட்டி சேமித்து வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான் மருந்து தயார்.
ஆட்டின் வாயில் உள்ள பு ன்னையும் சிறிது கல் உப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் நன்றாக கழுவி விடவேண்டும் பிறகு சுத்தமான பருத்தித் துணியை ஆட்டின் வாயில் உள்ள புண்ணை நன்றாக துடைக்க வேண்டும் அதன் பிறகு நாம் தயார் செய்ய வைத்துள்ள எண்ணெய் கலவையை காலை மாலை என இருவேளையும் புண்கள் உள்ள இடத்தில் தடவி விடவும் இதை முறையாக செய்தால் மூன்று நாட்களில் ஆடுகளுக்கு வாய்ப்புண் சரியாகிவிடும்.