ஆட்டு பண்ணையின் செலவினங்களை குறைத்தல்

அனுபவத்தின் அடிப்படையில் செலவுகளை குறைக்க சிறு குறிப்புகள் :

1. நல்ல ஆரோக்கியமான ஆடுகளை தேர்ந்தெடுங்கள்

2. குறைந்தது 20 நாட்களுக்கு பின்பே அவற்றை பண்ணையில் உள்ள மற்ற ஆடுகளுடன் சேருங்கள்

3. முடிந்த அளவுக்கு சொந்த தீவனங்களை பயன்படுத்துங்கள் – தீவனம் தயாரானபின் ஆடுகளை வாங்கவும்

4. அடர் தீவனம் சொந்த தயாரிப்பாக இருக்கும்போது கையாளுவது எளிது, செலவும் குறைவு.

5. அடர்தீவன மூல பொருட்களை மொத்தமாக வாங்குங்கள், ஒரு மாதம் வரை அவை கெடாது என்றார் .

6. அந்த காலகட்டத்தில் கிடக்கும் மூலபொருட்கள் செலவை குறைக்கும் -சரி விகிதத்தில் சிறு மாற்றங்கள் செய்வது பெரிய பதிப்புகளை உண்டாக்குவதில்லை

7. தடுப்பூசிகளை தவராமல் போடவும்

8. குடற்புழு நீக்கம் தவறாமல் செய்யவும்

9. ஆடுகளின் ஆரோக்கியம் தினம்தோறும் தவறாமல் கண்காணிக்கவும். வரும் முன் காப்பது சிறந்தது என்றார் .

10. முடிந்த அளவுக்கு பண்ணையை நவீன படுத்துங்கள், இது வேலை ஆட்களை நம்பாமல் பண்ணை நடத்த உதவும். உதாரணமாக, தீவன பயிர்களுக்கு சொட்டு நீர், தீவனம் வெட்ட, நறுக்க இயந்திரங்கள். வேலை எளிதாக இருந்தால் தான் வேலை செய்ய ஆட்களும் கிடைப்பார்கள்.

11. குறைந்த எண்ணிக்கையில் பண்ணையை ஆரம்பித்து விரிவாக்கம் செய்யும் பொது நம் அனுபவமே நமக்கு ஆசானாகும்.

பண்ணை ஆரம்பித்து இரண்டு வருடம் வரை பண்ணையிலிருந்து லாபத்தை எதிர்பார்க்க முடியாது, முதலீட்டை எடுக்கவும், பண்ணை விரிவு படுத்தவும் சில வருடங்கள் ஆகும். அதனால் மற்ற செலவினங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது நல்லது என்றார் .

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories