எருமை மாடு மேய்ச்சல் முறை

எருமை மாடுகளை கட்டிப்போட்டு தீவனம் கொடுத்து வளர்ப்பவர்களுக்கு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும். தினமும் 5 மணி நேரமாவது மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .குறிப்பாக சீன எருமை கன்று ஈனுவதற்கு முன் முதல் நாள் வரை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால் எவ்வித சிரமமும் இல்லாமல்கன்று ஈனும். பிறகு கொட்டகைக்கு வந்து மதியம் 2 மணிக்கு ஒருமுறை மூன்று மணிக்கு ஒருமுறை எருமையின் மேல் தண்ணீர் தெளித்து உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குளிப்பாட்டும்போது கால் விரல்களின் இடுக்குகளில் அழுக்கு சேராமல் நன்றாக தேய்க்க வேண்டும் இல்லை என்றால் புண்கள் பெருகி உயிருக்கே ஆபத்தாகிவிடும்

பாதுகாப்பு முறை
எருமை அம்மை

எருமையின் மடியும், உள்தொடை போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றும். இதற்கு சரியான தடுப்பூசி ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை பொதுவாக இவை தானாகவே மறைந்துவிடும் புண்கள் பெரிதாகாமல் அதை சுத்தப்படுத்த வேண்டும். 1:1000 விகிதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் மற்றும் பேரிங் அமிலம் களிம்பை தடவலாம். பாதிக்கப்பட்ட எருமை அப்புறப்படுத்தி தனியே பால் கறக்க வேண்டும். இந்த எருமையில் இருந்து கறக்கும் பாலை நன்கு காய்ச்சிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories