மல்லி செடி அது இது அதிக அரும்புகள் வைக்க என்ன உயிர் உரம் இடவேண்டும்?
மாதம் ஒருமுறை நுண்ணுட்ட சத்துக்களை வேருக்கு அருகே இட்டு தண்ணீர் விட வேண்டும்.
உயிர் உரங்களை பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம், பொட்டாசியம் , பாக்டீரியா மற்றும் VAM ஆகியவற்றையைத் தொழு உரத்துடன் சேர்த்து சிறிது வெல்லம் தயிர் கலந்து 3 நாள் நிழலில் வைக்கவேண்டும்.
மாதம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி இவற்றை வேறில் இடுவதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.அதிக அரும்புகளும் தோன்றும்.
மூலிகை பூச்சிவிரட்டி எவ்வாறு தயார் செய்வது?
நெய்வேலியில் காட்டாமனுக்கு , ஆடாதோடை, நொச்சி, வேம்பு போன்ற இலை தளைகளை தலா 5 கிலோ அளவிற்கு எடுத்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு 10 லிட்டர் மாட்டு கோமியம் கலந்து 7 நாட்கள் ஊற வைத்தால் பூச்சிவிரட்டி தயாராகிவிடும்.
அதன் பிறகு வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம் .மாட்டுக் கோமியம் கிடைக்காவிட்டால் தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம் 10 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும்.
பருத்தியில் பூச்சி தாக்குதலை எவ்வாறு தடுக்கலாம்?
சர்க்கரை கரைசலுடன் வேப்ப எண்ணெய் கலந்து நீரில் கலக்கி பருத்திச் செடி மீது தெளித்தால் மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
சாம்பலை பருத்தி இலை மீது தூவினால், அஸ்வினி மற்றும் இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.
சோளம் அல்லது கம்பு பயிரை பருத்தி பயிரை சுற்றி சாகுபடி செய்தால் வெள்ளை ஈ மற்றும் இலைப்பேன் தாக்குதலை தவிர்க்கலாம்.
அண்ணாச்சி கன்றுகளையும் எப்படி நடவு செய்வது?
கன்றுகளை இரட்டை வரிசை முறையில் நடவு செய்வதற்கு ஏற்றவாறு பார்கள் அமைக்க வேண்டும். 300 முதல் 350 கிராம் எடை உள்ள மேல் கன்றுகள் பக்க கன்றுகள் ஆகியவை நடவு செய்வதற்கு பயன்படுகிறது.
கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் 30 சென்டிமீட்டர் ஆகவும், வரிசைகளுக்கு இடையிலுள்ள இடைவெளி 60 சென்டிமீட்டர் ஆகவும், இருக்குமாறு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
எருமை மாட்டு பாலின் சிறப்புகள் என்ன?
எருமை மாட்டு பால் நாட்டுப் பசுவின் பாலைக் காட்டிலும் திடமும், கொழுப்புச் சத்தும் கொண்டது. ஆனால் எருமைப்பாலில் ஊட்டச்சத்து அதிகம்.
தண்ணீர் கலந்தாலும் நீர்த்துப் போகாத தன்மை எருமை பாலுக்கு உண்டு .இது பால் சார்ந்த இனிப்பு பொருட்கள் தயாரிக்க உதவுகிறது.