மரவள்ளிக்கிழங்கு வெள்ளை நோய் தாக்குகிறது. அதற்கு என்ன செய்யலாம்?
மாட்டுச் சாணத்தைக் கரைத்து வடிகட்டி அந்த நீரை 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தால் மரவள்ளிக் கிழங்கினை வெள்ளை நோயை கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தெளிக்கலாம்.
சுக்கு அஸ்திரம் தெளிப்பதன் மூலம் வெள்ளை நோயை கட்டுப்படுத்தலாம்.
பார்த்தீனிய செடிகளை இயற்கை முறையில் அழைப்பது எப்படி?
தரிசு நிலங்களில் மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும். பயிரிட்டுள்ள நிலங்களில் இதை பயன்படுத்தக்கூடாது.
மூன்று கிலோ சுண்ணாம்பு 10 லிட்டர் தண்ணீரில் 4 கிலோ உப்பு 3 லிட்டர் கோமியம் 2 லிட்டர் வேப்ப எண்ணெய் கொண்டு கரைசலை தயாரித்து கலைகள் மீது தெளித்தால் பார்த்தீனியம் கட்டுப்படுத்தும்.
நெல்லிக் காய் கறி செடிகளுக்கு இடையே ஆன களைகளை அகற்ற இக்கரைசலை பயன்படுத்தக் கூடாது.
உருளைக்கிழங்கு செடியில் ஏற்படும் நோயை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி?
வாரம் ஒரு முறை ஒரு லிட்டர் நீரில் சூடோமோனஸ் 4 கிராம் கலந்து தெளிப்பதன் மூலம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தெளிக்கலாம் அல்லது நீர் பாசனம் வழியாக கலந்துவிடலாம்.
கோ-4 தீவனப் பயிரை எந்த நிலையில் அறுவடை செய்து மாட்டிற்கு போடலாம்?
நடவுக்குப் பிறகு 75 முதல் 80 நாட்கள் கழித்து அறுவடை செய்து மாடுகளுக்கு கொடுக்கலாம்.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் இன் ஆக்சலேட் என்ற நச்சுப் பொருள் அதிகமாக இருக்கிறது. எனவே இத்தீவின் அத்துடன் ஐந்து கிலோ பயறுவகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும் அல்லது தாது உப்புக் கலவையை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.
கன்றுக்குட்டியை இழந்த கறவை மாட்டை கவனிப்பது எப்படி? மடியில் பால் இருந்தால் ஏதாவது நோய் வருமா?
கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும்.
கன்று ஈன்ற மாடுகள் இருக்கும் கொட்டகையை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பரவும்.
கன்று ஈன்ற மாடுகளுக்கு அரிசி அல்லது கோதுமை தவிடு கொடுக்கலாம் பசுந்தீவனம் கொடுப்பது நல்லது. கலப்பு தீவனத்தை சிறிது சிறிதாக மாட்டின் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அளிக்கவேண்டும்.
மடியில் பால் மடி வீக்கம் ஏற்படும் .இதனாலேயே மடியிலிருந்து பாலை கறக்க வேண்டும்.