கால்நடைகளுக்கு தண்ணீர் குறைவினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது?

கால்நடைகளுக்கு தண்ணீர் குறைவினால் ஏற்படும் விளைவுகள்:

** குறைவான அளவு நீர் உட்கொள்வது தொடர்ந்து நிறுத்தப்படுவதால் இரத்தம் மிகவும் கெட்டியாகிவிடுகிறது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

** நீர் குறைவாக உட்கொள்ளுவதால் சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுவதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது.

** நீர் உட்கொள்ளுதல் 20-22% ஆகக் குறையும் போது கால்நடைகள் இறக்கவும் நேரிடுகிறது. ஆனால் நீர் அதிகம் உட்கொள்ளுவதால் எந்தவித எதிரிர்விளைவுகளோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. நீர் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்படியாகச் செய்தல் அவசியம்.

** நீர் இழப்பு உட்கொள்ளும் நீரானது மூச்சுக்காற்றிலும், தோலின் மூலம் வியர்வையாகவும், மற்றும் சிறுநீர், சாணம் ஆகியவற்றுடனும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் உள்ள யூரியாவானது நீரினால் ‘பாதிப்பு இல்லாத அளவிற்கு கரைக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது.

** உட்கொள்ளும் நீரின் அளவு சீதோஷ்ண நிலை மற்றும் தீவனத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுகிறது. கோடைக்காலத்தில் உட்கொள்ளும் நீரின் அளவு 20-30% அதிகமாக இருக்கும்.

** அதேபோல் நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ளும்போதும் நீரின் தேவை பசுவைவிட கன்றுகளில் அதிகமாகவும், பால் கொடுக்கும் பசுக்களில் இவை இரண்டையும் விட அதிகமாகவும் இருக்கும்.

** தீவனத்தில் உள்ள உப்பின் அளவு மற்றும் அதிக புரதம் நிறைந்த உணவு ஆகியவை நீரின் தேவையை அதிகரிக்கின்றன.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories