கால்நடைகளை தாக்கும் நோய்கள்!

கால்நடைகளை தாக்கும் நோய்கள்!

கழல் நோய்

கழல் நோய் கண்ட மாடுகளில் காய்ச்சல் அதிகமாக இருக்கும் .கருசிதைவு 7 முதல் 9 மாதத்தில் நிகழும். நஞ்சுக் கொடி எளிதில் விழாது.

இது லிஸ்டிரிய என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

இந்த உயிரி மண், சாணம், புல் போன்ற எல்லா இடங்களிலும் இருக்கும். இந்த உயிரி மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.

கால்நடைகளை மட்டுமின்றி ஆடுகள், பன்றி, நாய் ,பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிலும் ஏற்படுகிறது.

பசியின்மை, அமைதியின்மை, மிகுந்த காய்ச்சல் போன்றவை மாறி மாறி வருவதால் இது சுற்று நோய் எனப்படுகிறது.

அறிகுறிகள் தெரிந்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட விலங்கு இறந்து விடும். கால்நடைகள் ஆக இருந்தால் இரண்டு வாரங்கள் வரை உயிர் வாழும்.

கொட்டகைகளில் மாடுகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட தீவனமும் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

நல்ல எதிர்ப்பு சக்தி உள்ள ஆரோக்கியமான மாடுகள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப அறிகுறிகளை கவனித்து விட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.

தொடை வீக்க நோய்

தொடை வீக்க நோய் ஏக்டினோமைல்ஸ் போவிஸ் என்ற உயிரியால் பரவுகிறது.

இது பெரிய நகர்த்த முடியாத அளவு கட்டியை மாடுகளின் தொடையில் உருவாக்குகிறது.

செம்புல் போன்ற புர்கள் உண்ணும்போது அவை மாடுகளின் வாய் ஓரங்களில் சிறிது கிழித்து விடுகிறது. இடுக்கு வழியே இவ்உயிரி புகுந்துவிடுகிறது.

இந்தக் கட்டி பெரிதாகி கண்ணுக்குத் தெரிய சில மாதங்கள் ஆகும். இதற்குள் இது சற்று முதிர்ந்து விடும்.
இந்தக் கட்டியில் மஞ்சள் நிற சீழ் போன்ற திரவம் எலும்பு இடுக்குகளில் தேங்கும்.

கவனிக்காவிட்டால் கட்டி பெரிதாகி உடைந்து அதிலிருந்து மஞ்சள் நிற சீழ் வெளி வர ஆரம்பித்துவிடும்.

நாசி எலும்புகளை பாதிப்பதால் மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும்.

கட்டி ஏற்பட்டால் உடனே கால்நடையை ( நல்ல நிலையில் இருந்தாலும் )மந்தையிலிருந்து அகற்றி தனியே வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லையென்றால் கட்டி உடலின் பிற பாகங்களுக்கு பரவ ஆரம்பித்து விடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories