கொட்டகைகளில் ஆடுகளுக்கு குளியல் தொட்டி மற்றும் நடைபாதை அமைக்கும் முறை..

1.. குளியல் தொட்டி

** ஆடுகளை நுண்ணுயிரிகள் தாக்கத்திலிருந்து பாதுகாக்க எஃகு இரும்புத் தகடுகளாலான குளியல் தொட்டி அல்லது செங்கல் / சிமெண்டிலான குளியல் தொட்டிகளை அவரவர் பொருளாதாரம் மற்றும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

** எஃகு இரும்பிலான தகடுகளால் குளியல் தொட்டி அமைக்கும்போது இதை மண்ணில் நன்றாக பதியவைக்க வேண்டும். தொட்டியைச் சுற்றி நன்றாக மண் அணைத்தல் வேண்டும். அப்போதுதான் தண்ணீர் நிரப்பும்போது தொட்டியின் வடிவம் மாறாமல் இருக்கும்.

** தொட்டியை பதிக்கும் இடத்தில் மண் தளர்வாகக் காணப்பட்டால், சிமெண்ட் கான்கிரீட் கொண்டு அடித்தளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

** இந்த குளியல் தொட்டி கொட்டகையின் ஒரு பக்கமாக இருக்கவேண்டும்.

2.. நடைபாதை

** கால்நனைப்பு மருந்துக் கலவையை எஃகு இரும்பு தகடு அல்லது சிமெண்ட் பூச்சினாலான பள்ளத்தில் கொட்டகையின் நுழைவுவாயிலில் அமைத்தல் வேண்டும். இதனால் ஆடுகளுக்கு ஏற்படும் குளம்பு வீக்க நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கலாம்.

** இந்த கால்நனைப்புப் பகுதி நன்றாக மண்ணில் பதிந்து இருத்தல் வேண்டும்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories