கால்நடைகளுக்கு பருவ காலங்களுக்கு ஏற்ப பல வகையான நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது இதற்கு உரிய காலத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் என்பது அவசியமாகும் அந்த வகையில் கால்நடைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசி குறித்து இங்கு பார்க்கலாம்.
கால்நடைகளுக்கும் பருவ காலங்களுக்கு ஏற்ப பல வகையான நோய்கள் ஏற்படும் அவை வந்தவுடன் குணப்படுத்துவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது அதற்கு ஒரே வழி தடுப்பூசி தான்.
மாடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்குத் தகுந்தவாறு தடுப்பூசி உள்ளது அவற்றை செலுத்தினால் தான் மாடுகளுக்கு நோய் ஏற்படாது.
கோமாரி நோய் கருச்சிதைவு நோய் சப்பை நோய் தொண்டை அடைப்பான் நோய் போன்றவற்றிற்கு தடுப்பூசி போடுதல் அவசியம்.
இந்த தடுப்பூசிகளை குறிப்பிட்ட நாட்களில் தான் போட வேண்டும்.
கோமாரி நோய்க்கு ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் தடுப்பூசி போடுதல் வேண்டும் கருச் சிதைவு நோய்க்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி போடுதல் அவசியம் ஆகும்.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மழைக் காலத்துக்கு முன்பு சப் பை நோய்க்கான தடுப்பூசி போடவேண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி போடுதல் வேண்டும்.