காம்புகளில்கொப்பளம் உண்டானால் அதற்கு பால் கறந்து முடித்த உடனே வேப்ப எண்ணெய் தேங்காய் எண்ணெய் கலந்து தடவி விட வேண்டும்.
மேலும் கொழுந்து வேப்பிலை மஞ்சள் கல்லுப்பு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவி வர வேண்டும் பால் கறப்பதற்கு முன்பு காம்புகளை நன்றாக கழுவ வேண்டும்.
அம்மை நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது .அவ்வாறு அம்மை நோய் உண்டானால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
மாட்டின் மேல்ஈ மொய்க்கிறது அதற்கு என்ன செய்வது
வேப்ப எண்ணெய் மாட்டின் மேல் தேய்த்துவிட வேண்டும்
தென்னையில் குருத்து வண்டுகள் உள்ளது அதை அழிக்க என்ன வழி
மணல் கொட்டி விடுங்கள் தென்னை மரமும் குருத்தில்.
மிளகாய் நடுவதற்கு எவ்வளவு இடைவெளி விட வேண்டும்
மிளகாய் நாற்று 30 சென்டிமீட்டர்( கோ-3 ரகத்திற்கு மட்டும் முப்பதுக்கு 15 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.