பிறந்தக் கன்றுக்குட்டிகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது? புதிய முயற்சி!

கால்நடைகளைப் பொருத்தவரை, நம் குழந்தைகள் போல கவனிக்க வேண்டும் என்பார்கள். நம்முடைய வாழ்வாதாரமாகத் திகழும் கால்நடைகளைக் காலம் முழுவதும் பராமரிப்பதுடன், நன்றிக்கடன் ஆற்றும் மனப்பாங்கு உள்ளவர்களாக இருப்பதும் முக்கியம்.

பராமரிக்க டிப்ஸ் (Tips to maintain)
அந்த வகையில் பிறந்தக் கன்றுக்குட்டியை எவ்வாறு பராமரிப்பது என்பதைப் பார்ப்போம்.

கன்று பிறந்த உடனே அதன் வாயிலும் மூக்கிலும் போர்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை (malous) சுத்தம் செய்ய வேண்டும் பிறகு

தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல் முழுவதும் சுத்தம் செய்யும்

அவ்வாறு செய்யாவிடில் அல்லது குளிர்காலத்தில் பாரமற்ற துணி (அ) சணல் பையைக் கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றிற்கு சீரான சுவாசம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.

அதன் வயிற்றிலும் நெஞ்சிலும் சிறிது கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாக சுவாசிக்க இயலும்.

தொப்புள் கொடியை வயிற்றிலிருந்து 2 லிருந்து 5 சென்டிமீட்டர் நீளம்விட்டு, அறுத்து விட்டு அயோடின் அல்லது டிஞ்சர் தடவி முடிந்துவிட வேண்டும்.

குட்டித் தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அருந்த முடியவில்லை என்றால்,அதனை அதைத் தூக்கிவிட்டு விட்டு உதவி செய்யலாம்.

முடிந்தவரை 30-லி விருந்து 45 நிமிடங்களுக்குள் எழுத்து சென்று தாய்ப்பால் குடிக்கச் செய்ய வேண்டும்.

ஆறு மணி நேரத்திற்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டியது கட்டாயம்.

பிறந்த கன்றின் எடையை (Weight) அளவிட வேண்டும்.

மாட்டின் காம்பினை நன்கு நீரினால் (Water) கழுவிச் (Clean)சுத்தம் செய்ய வேண்டும்.

கொட்டிலில் உள்ள திரவங்களை அகற்றி அதை சுத்தப்படுத்த (Clean) வேண்டும்.

கன்றிற்குத் தேவையான படுக்கை வசதி (Bed) அமைத்துத் தரவேண்டும்.

குளிர்காலமாக இருந்தால் அதை குளிரில் இருந்து பாதுகாக்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories