குஞ்சு பொரித்தவுடன் மறுபடியும் தாயும் தந்தையும் மாற்றி மாற்றி குஞ்சுகளை காக்கும். குஞ்சுகள் பெற்றவர்களின் சிறகின் கதகதப்பில் உறங்கும். குஞ்சு பொரித்த 15 நாட்களில் குஞ்சுகளை பிரித்து தனியாக வைத்துதீவனம் கொடுத்து வளர்த்தால் கூடுதல் எடை கிடைக்கும்.பிறந்த ஆறிலிருந்து எட்டு வாரங்கள் ஆனவுடன் புறா குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறக்க ஆரம்பிக்கும்.
பாதுகாப்பு முறைகளும்
இதில் நோய்த் தாக்குதல் எதுவும் காணப்படுவதில்லை.
விற்பனை
புறா வளர்ப்பைப் பொறுத்தவரை இளம் குஞ்சுகளுக்கு தான் அதிக கிராக்கி உள்ளது .21 நாள் 25 நாள் வயதுடைய குஞ்சுகள் ஒரு ஜோடி 200 ரூபாய் வரை விற்பனையாகும் .பெரிய ஜோடி 300 ரூபாய்க்கு விற்பனையாகும் .தற்போது இதுவும் ஒரு லாபகரமான தொழிலாக மாறி வருகிறது.