புறா முட்டையிடும் பருவம்

சுவரில் பதிக்கப்பட்ட மண் பானையில் ஜோடிஜோடியாக புறாக்கள் அடைந்து கொள்ளும். பெண்புறா இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும் .முட்டையை கையால் தொடக்கூடாது. தொட்டால் முட்டைகள் பொறிக்காது .பெண் புறா அடை படுத்தவுடன் ஆண் புறா வேறு பானைக்கு மாறிவிடும். முட்டைகளை ஆண் பெண் இரண்டுமே மாறி மாறி அடைகாக்கும்.மற்ற பறவைகளை வீட்டை நெருங்க விடாது. அடை உட்கார்ந்த 15 முதல் 20 நாட்களில் பொரித்து குஞ்சுகள் வெளிவரும் பெற்றோர்கள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு கொண்டுவந்து ஊட்டும் .இதை புறாபால் என்பார்கள். பிறகு 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான் அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும்.ஒரு பெண்புறா மூலமாக ஓராண்டுக்கு குறைந்தது 100 குஞ்சுகள் வரை கிடைக்கும்.

குஞ்சு பராமரிப்பு
குஞ்சு பொரித்தவுடன் மறுபடியும் தாயும் தந்தையும் புறாவுக்கு மாறிமாறி குஞ்சுகளை அடைகாக்கும். குஞ்சு தாயின் கதததப்பில் உறங்கும் குஞ்சு பொரித்த 15ஆம் நாளில் குஞ்சுகளை பிரித்து தனியாக வைத்து தீவனம் கொடுத்து வந்தால் கூடுதல் எடை கிடைக்கும் .பிறந்த ஆறிலிருந்து எட்டு வாரங்கள் ஆன உடனே புறா குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறக்க ஆரம்பிக்கும்.

இதில் நோய் தாக்குதல் எதுவும் ஏற்படுவது இல்லை.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories